பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட0 திருக்கோவையார் உரைநடை 27. இயற்பட மொழிதல் (378. அஞ்சார்) அன்று நம் பொருட்டாக நம் புனத்தின் கண்ணே மாந்தழை ஏந்தி வந்தாராகிய அவர் (தலைவன்) இன்று நனவில் என் நெஞ்சத்தின் கண்ணுர், யான் தடுப்பினும் என் நெஞ்சிடத் தினின்றும் நீங்கார். துயில் உண்டாயின் பஞ்சார்ந்த அமளிக்கண் எம் பயோதரத்தை (கொங் - கையை)ப் பிரியாதார். இத் தன்மை உடையவரை நீங்கள் கொடுமை கூறுகின்றது என்னே? எனத் தலை வன இயற் பழித்தவர்க்குத், தலைவி தலைவனை இயற்பட மொழிந்தாள். இது தலைவனது ஒழுக்கத்தை முன்பு பழித்தவர்கள் கேட்பத் தலைவி கூறியது. 28. நினைந்து வியந்துரைத்தல் (379. தெள்ளம்) புனலாடப் பிரிந்து பரத்தையிடத்து ஒழுகா நின்ற தலைவன், யான் தன்னை (தலைவியை) நினையாது வேருென் றின் மேல் உள்ளத்தைச் செலுத்தினுலும் தான் என்னை நினைந்து என் உள்ளத்தில் புகுகின்ருள். அவ்வாறன்றி நான் தன்னை (தலைவியை) நினைக்குந்தோறும் பள்ளத் துப் புகும் புனல்போல நிறுத்த நில்லாது என் மனத்தா ளாகின்ருள். ஆதலால், பிரிந்து ஈண்டிருத்தல் மிகவும் அரிது என்று தலைவியை நினைத்து வியந்து கூறினன். (இது தன் நாயகியுடைய உண்மையான செய்தியை விரும்பிச் சொன்னது.) 29. வாயில் பெருது மகன்றிறம் நினைதல் (380. தேன்வண்டு) பரத்தையரைப் பிரிந்து தலைவியின் நினைவோடு வந்த தலைவன் வாயில் பெருது வாயிலின்கண் நின்று வானிடத்துள்ள வளவிய இடங்களை எனக்குத் தரும் மெய்ம்மை உடையவனும் கதி பெறுவது புதல்வராலே என்கையால் குதலைச் சொல் பேசுபவனும், கடல் தந்த பெருமை உடைய அமகத்தை ஒத்தவனும் ஆன மகன்