பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~~R, Bы — PL திருக்கோவையார் உரைநடை கண்ணே வந்து யானை யைக் கடிந்த விருந்தினரும ஆய தலைவர் பெருமையை நின்ையாது இன்று தம் வாயிற்கண் வந்து, வேட்கைப் பெருக்கம் தம்மிடத்துச் சிறப்ப நின்று ஒன்றும் வாயைத் திறக்கின்றிலர். இதற்கு நாம் என்ன செய்வது? என்று தலைவியிடம் வாயில் வேண்டினள். குறிப்பு : சிற்றில் இழைத்து விளையாடும் போது தலைவர் விருங்க ய்ச் சென்று கின் ருராதலின் விருங் தினர் என்ருள். (செய்யுள் 290 பார்க்க) வாயில் பெருமல் தலைவன் விற்கத் தோழி சொன்னது பழைய உரை. 33. மனையவர் மகிழ்தல் (384. தேவி அங்கண்) தோழி வாயில் வேண்டத் தலைவி கண் சிவந்த நோக்கங் கொண்டு சித்திரம் போன்ற தலைவிக்கு உவகை (மகிழ்ச்சி) தரக்கூடிய தலைவன் வந்தான் என்ற சொற்களைச் சொல்ல வேண்டிக் காதலன் வந்து பொருந்துகின்ற இயவொலி (வாத்திய ஒலி) கேட் டனையோ என்று கண்டார் வந்து சொல்லக் கேட்டு வெய்தாக உயிர்த்து (பெருமூச்சு விட்டு) குவளைப் பூப் போலக் குளிர்ந்த கண்கள் செங்கழுநீர்ச் செவ்வியை வெளவுதல் கற்றன, (சிவந்தன). இனி என் நிகழும்?' என்று மனையோர் தம்முள் மகிழ்ந்து கூறினர். (தலைவி கோபித்துப் பார்க்க மனையிலுள்ளார் கூறினது பழைய உரை) s 34. வாயின் மறுத்து உரைத்தல் (385. உடைமணி) மனையவர் தலைவியின் துனி (கோபம்) கண்டு மகிழா நிற்ப, தோழி வாயில்வேண்ட உடை மணியை அரையில் கட்டிச் சிறு தேரை உருட்டி உலாவும் இந்த நடை மணியை (புதல்வனை) நமக்குத் தந்தபின் நம்முடைய ஆயத்தார் முன்னே நம்முடைய வாசலைக் காதலர் (தலைவர்) இன்று கண்டார். இஃது அன்ருே நம்மாட்டு அவர் அருள் என்று தலைவி வாயின் மறுத்து உரைத்தாள். ".