பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடகா திருக்கோவையார் உரைநடை ரிடத்து இவ்வாறு புணர்தல் (விரும்புதல்) உமக்குச் சிறந்தன அல்ல போலும் என்று மிகுத்துரைத்து ஊடி நின்ருள். -n. குறிப்பு: 1. காட்டையும் ஊரையும் வீட்டையும் குறித்துத் தலைவி வெறுத்துச் சொன்னது பழைய உரை. குறிப்பு : 3. காடும் ஊரும் இல்லும் புகழ்ந்து நீர் இவற்றிற்குத் தக்க ஒழுக்கம் உடையீர்! அல்லீர்! எனவே கட்டத்துக்கு உடன்பாடு இல்லாமை தோன்றினது. 43. ஊடல் நீட வாடி உரைத்தல் (394. திருந்தேன்) இங்ங்னம் தணிக்கத் தணியாது மிகுத்து உரைத்துத் தலைவி, மேன்மேலும் ஊடா நிற்ப ஒருவாற்ருனுந் திருந்தாத நான், பிறவித் துன்பத்தில் பிழைக்க வந்து நின்ற சிற்றம்பலவரது தெற்கின்கண் உளதாகிய பொதியிலிடத்து இருந்த நான், உய்யும் வண்ணம் வந்து தன் கண்களின் உள்ளக் கருத்தை வெளிப்படுத்தும் நாளுெடு கூடிய நோக்கமாகிய இனிய கடைக்கண் நோக்கத்தை முன்பு எனக்குத் தந்து பெருந்தேன் போல இனிதாய் என் நெஞ்சம் உருக என்னைப் பிடித்துத் தன் வசம் ஆக்கிய நமது பெண் வடிவை உடைய அமிழ்த மாகிய அது இது அன்று; இதுவோ வருவது ஒரு மாயம். அதல்ை நீ வருந்தாது ஒழி நெஞ்சமே ! என்று தன் நெஞ்சுக்குக் கூறி ஊடல் நீடியதால் தலைவன் வாடி 44. துணி ஒழிந்து உரைத்தல் (395. இயல்மன்னும்) இங்ங்னம் ஊடல் நீடுதலால் தலைவனது ஆற்ருமை. கண்ட தலைவி, 'அன்று பொதியிலிடத்து இருளின்கண் இக்குன்றிள் பக்கத்தில் தங்கும் யானைகளை ஒட்டி அவை புக்க இடம் தேடும் சிங்கமுள்ள வழியகத்துப் பொரு f வேலே துணையாக வந்து இயல்பாகிய நிலைபெற்ற,