பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர்.

7


கண்ணன் பல ஆலயங்கள் கட்டினான். இதற்குப் பிறகு சுமார் 500 வருஷம் வரையில் சோழமன்னரைப்பற்றி ஒன்றும் தெரியாது.


5-ம் அதிகாரம்.
பல்லவர்.

தென் இந்தியாவில் சோழர் அரசு செலுத்துங்காலத்தில் பல்லவர் காஞ்சீபுரத்தில் ஆண்டனர். அவர்கள் எவர் என்றாவது எவ்விதம் சோழநாட்டைக் கைப்பற்றினார்கள் என்றாவது சொல்லமுடியாது. தென் ஆற்காடு ஜில்லாவில் பனைமலையில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது ராஜஸிம்ஹ பல்லவனுடைய சாஸனத்திலிருந்து அசுவத்தாமன் துரோணி என்ற ரிஷிக்கு வல்லவன் என்று ஒரு குமாரன் இருந்ததாகவும் அவனுடைய சந்ததியாரே பல்லவர் என்றும் அவர்கள் பாரத்துவாஜ வம்சமென்றும் அசுவமேதயாகங்கள் பல செய்தார்கள் என்றும் தெரிகிறது. பல்லவ கிரந்த எழுத்தில் 'வ' வும் 'ப' வும் அதிக வேற்றுமைப் படாமையால் 'வல்லவர்' 'பல்லவர்' ஆக மாறியிருக்கலாம். மஹாபாரதத்தில் கௌரவர்களுக்கு ஆசாரியராயிருந்த துரோணரின் புத்திரன் அசுவத்தாமனின் சந்ததியிலேற்பட்ட ஒருவன்தான் இந்த அசுவத்தாமன் துரோணியாய் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இவர்கள் கஞ்சம் முதல் தெற்கு கோடி வரையில் அரசு செலுத்தியதாகவும் பலமான கோட்டைகள் பல கட்டினதாகவும் தண்ணீர் இல்லாத இடங்களில் ஏரிகள் வெட்டினதாகவும் கைத்தொழில்களை விர்த்தி செய்ததாகவும் சமுத்திர மார்க்கமாய் வியாபாரம் செய்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. திரிசிராமலையில் உச்சிப் பிள்ளையார் கோவிலுக்குக் கீழே தென்புறத்திலும் மலைக்கோட்டை வீதியில் தென்