பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருச்சினாப்பள்ளி புராதன சரித்திரம்.

6


வசித்த வீட்டைக் கொளுத்திவிட்டான். காலில் பட்ட காயத்துடன்மட்டும் அரசகுமாரன் தப்பித்தான். அவனுக்குத்தான் கரிகாலச்சோழன் அல்லது ஹஸ்திபாதன் என்று பெயர். இவன் திரிசிராமலைக்கு வந்து சாரமாமுனியை அடி பணிந்து தாயுமானவரைச் சேவித்து உறையூரைப் புதுப்பித்தான். இவன் தான் 1080 அடி நீளமும் 80 அடி அகலமும் 18 அடி உயரமும் உள்ள கல்லணையைக் கட்டினது. சேரபாண்டியர்களுடன் தஞ்சாவூர் ஜில்லா வெண்ணிலில் யுத்தம் செய்து அவர்களைத் தோற்கடித்தான். இவன் ஆக்ஷிசெய்த காலம் ஸா.17-க்கு (A. D. 95.) முந்தின 45 வருஷங்கள்.


4-ம் அதிகாரம்.
சோழமன்னர்.

நலன்கிள்ளி (18-27) :- இவன் கரிகாலன் குமாரன். அடிக்கடி சோபாண்டியருடன் சண்டை செய்தான். பாண்டியநாட்டின் 7 பலமான கோட்டைகளைத் தன்னுடைய தாக்கிக்கொண்டான்.

கிள்ளிவல்லன், பெருநார்க்கிள்ளி (28-72) :- நலன்கிள்ளி இறந்தபின் ராஜ வம்சத்தில் பிறந்த 9 பேர்கள் ராஜ்யத்தைத் தங்களுள் வீதித்துக்கொள்ளும் பொருட்டு பெருங் கலகம் செய்தார்கள். நலன்கிள்ளியின் குமாரன் கிள்ளிவல்லன் கலகத்தையடக்கி ராஜ்யத்தையடைந்தான். சேரபாண்டியருடன் செய்த யுத்தங்களில் இவனுக்கு வெற்றியும் கிடைத்தது. இவனுக்குப் பிறகு பட்டமடைந்த பெருநார்க்கிள்ளி ராஜஸூய யாகம் நடத்தினான்.

கொச்சென்னிக்கண்ணன், கொக்கிள்ளி :-சோழ நாட்டையாண்ட பிந்திய அரசர்களுள் கொச்சென்னிக்