பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜாதித்யன்.

9


கிரமத்தில் பல்லவர் வம்சம் அழிந்து போயிற்று. இக்காலத்திய வன்னியர், படையாச்சிகள், புதுக்கோட்டை ராஜர்கள், இன்னும் சிலர் தாம் பல்லவரைச் சேர்ந்தவர் என்று சொல்லுகிறார்கள்.


6-ம் அதிகாரம்.
சோழமன்னர் மீட்சி.

ஸா. 9-வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் விஜயாலயச் சோழன் தன் ஆட்சியைப்பரப்பி சோழருக்குப் போர்ப் பயிற்சி செய்வித்தான்.

ஆதித்யன் I (816-828) :- சேலம் கோயம்புத்தூர் ஜில்லாக்கள் அடங்கிய கொங்கநாட்டை 816-ல் விஜயாலயன் குமாரன் ஆதித்யன் I வென்றான். பழய பல்லவ ராஜ்யமாகிய தொண்டைமண்டல (தென் ஆற்காடு, வட ஆற்காடு, செங்கல்பட்டு ஜில்லாக்கள்) க்தையும் தனதாக்ஷிக்குக் கொணர்ந்தான்.

பரந்தகன் I (828-868) :- இவன் பாணர், கங்கையர், பாண்டியர், சிங்களர் முதலியோரைத் தோற்கடித்தான். தான் ஜெயித்த நாடுகளிலிருந்து கொண்டுவந்த ஸ்வர்ணம் பூறாவும் சிதம்பரம் சிவாலயத்துக்குக் கொடுத்தான். ஹேம கர்ப்பம், துலாபாரம் முதலிய பல நற்கருமங்கள் செய்து, அந்தணருக்குப் பூதானம் முதலிய பல கொடைகளும் செய்து, அனேக ஆலயங்களும் கட்டுவித்தான். அவன் ராஜதானி காஞ்சீபுரத்திலும் தஞ்சாவூரிலும் இருந்தன.

ராஜாதித்யன் (869-871) :- இவன் தக்கோலத்தில் 871-ல் ராஷ்ட்ரகூட கிருஷ்ணராஜனால் யுத்தத்தில் கொல்லப்பட்டான்.