பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

திருச்சினாப்பள்ளி புராதன சரித்திரம்.


அரிஞ்சவன், கண்டாராதித்யன், மதுராந்தகன், பரந்தகன் II, ஆதித்யன் II :— வீரபாண்டியனைத் தோற்கடித்து ராஷ்ட்ரகூடரையும் துறத்தினவன் ஆதித்தியன் II.

ராஜராஜன் I (907-935) :- சோழ மன்னர்களுள் மிகக் கீர்த்திவாய்ந்தவன் ராஜராஜன் I. அவன் காலத்தில் நாட்டுக்கு உண்டான ஸம்பத்து நூறு வருஷங்கள் வரையில் மாறவில்லை. மேற்கே கொல்லம் குடகுவரையிலும் தெற்கே லங்கை கன்னியாகுமாரிவரையிலும் வடக்கே உத்கல நாடுவரையிலும் அவன் ஆட்சி எட்டிற்று. 916-ல் சேர நாட்டிற்கு ஒரு கப்பல்படை யனுப்பி ஒரு துறைமுகத்தைப் பிடித்தழித்தான். சேரபாண்டியர்களை ஒவ்வொரு யுத்தத்திலும் தோற்கடித்தான். 920-ல் கங்கையர், நொலம்பர், பாண்டியர் முதலியோரைத் தோற்கடித்து தடிகைப்பாடி, வெங்கி, குடகு முதலிய ஊர்களைப் பிடித்தான். 924-ல் கொல்லம், கலிங்கம், லங்கை முதலிய இடங்களைக் கைப்பற்றினான். 926-ல் சாலுக்கியர்களைத் தோற்கடித்தான். 933-ல் லக்ஷத் தீவுகளையும் தனது வசமாக்கிக் கொண்டான்.

தஞ்சாவூரில் பிருகதீசுவரஸ்வாமி கோவிலைக் கட்டினான். புறமதஸ்தரை ஹிம்ஸிக்காமல் தனக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசன் ஒருவன் கட்டிய பெளத்தாலயத்தைக் கண்டு ஸந்தோஷித்தான். க்ருஷியை விர்த்திசெய்தான். கிராம பரிபாலனம் வெகு உத்தமமாய் நடத்திவந்தான்.

ராஜேந்திரன் I (936-966) :- இவன் ராஜராஜனுக்குப் பிறகு வந்த அவன் குமாரன். இவன் கங்கைநதி வரையில் வெற்றியுடன் சென்று கங்கைகொண்ட சோழன் எனப் பெயரும் பூண்டான். பர்மாவுக்குக் கப்பல் படையனுப்பி கிக்கோபார் தீவுகளையும் வென்றான். தஞ்சாவூர் கோவிலைப்