பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீரராஜேந்திரன்.

11


போலவே ஜெயங்கொண்டசோழபுரத்தில் ஒரு ஆலயத்தையுங் கட்டினான்.

ராஜாதிராஜன் I (967-975):— 940 முதல் யுவராஜாவாயிருந்துவந்த ராஜாதிராஜன் பட்டத்துக்கு வந்த பிறகு சேரபாண்டிய சிங்களர்கள் கலகம் செய்தார்கள். அவர்கள் அடக்கப்பட்ட பிறகு அவன் சாலுக்கியருடன் யுத்தம் செய்து அவர்களை கொல்ஹாபுரம் வரை விரட்டியடித்து அசுவமேதயாகமும் செய்தான். 975-ல் கொப்பத்தில் சாலுக்கியருடன் நடந்த சண்டையிலிறந்தான்.

ராஜேந்திரன் II (976-986) :—
வீரராஜேந்திரன் (987-990) :— இவன் சேரபாண்டியருடன் யுத்தம் செய்து வெற்றியடைந்தபின் வெங்கியை மீட்டான். சாலுக்கியருடன் நடந்த ஐந்து போர்களிலும் சோழமன்னனே ஜெயம் பெற்றான். துங்கைபத்ரை நதிகள் கூடும் குடலியில் கடைசியாய் அவர்களைத் தோற்கடித்த போதிலும் அவர்களுள் முதன்மையான விக்ரமாதித்யனுக்குத் தன் குமாரியைக் கல்யாணம் செய்வித்து சாலுக்கிய ராஜ்யத்தையும் அவனிடம் ஒப்பித்தான்.[1]


  1. ராஜராஜசோழன் I வெங்கியிலாண்ட விமலாதித்ய சாலுக்கியனுக்குத் தன் குமாரியைக் கொடுத்தான். இவ்விம்லாதித்யன் 945-ல் இறந்தான். அவன் குமாரன் ராஜராஜ சாலுக்கியன் தன் மாமன் ராஜேந்திரச் சோழனின் குமாரியை மணம்புரிந்து கொண்டு 985 வரையிலாண்டான். அவன் குமாரன் குலோத்துங்கனை ராஜேந்திரச்சோழன் I ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டதால் அவன் ஸகோதரன் விஜயாதித்யனுக்கு பட்டம் கிடைத்தது. வீரராஜேந்திரச்சோழன் மேலே சொல்லியபடி வெங்கியைப் பிடித்தபோது தஞ்சையிலாண்ட குலோத்துங்கச் சோழன் 1-ஆல் (ராஜேந்திரச் சோழன் I-இன் ஸ்வீகார புத்திரன்) ஹிம்ஸிக்கப்பட்ட விஜயாதித்ய சாலுக்கியனுக்கு உதவிபுரிந்தான் போலும். அல்லது 986-ல் வெங்கியின் மேல் படையெடுத்த விக்ரமாதித்ய மேலசாலுக்கியன் விஜயாதித்யனை ஹிம்ஸித்திருக்கக்கூடும். எப்படியிருந்தாலும் விக்ரமாதித்ய மேல சாலுக்கியனுக்குத்தான் வீரராஜேந்திரச் சோழன் தன் மகளைக் கொடுத்தது. சாக்கியர்களுள் ஏற்பட்டிருந்த குடும்ப வியவஹாரங்களைச் சோழ மன்னன் தீர்த்துவைத்திருக்கவேண்டுமென்று தோன்றுகிறது.