பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

திருச்சினாப்பள்ளி புராதன சரித்திரம்.


ஆதிராஜேந்திரன் (991-992) — வீரராஜேந்திரன் இறந்தபிறகு பட்டத்துக்கு வந்த ஆதிராஜேந்திரன், ராஜ்யத்தில் நடந்த ஓர் கலகத்தில் கொல்லப்பட்டான். பட்டத்துக்குரியவன் குலோத்துங்கச் சோழன் I ஆதலால் அவன்தான் சோழ மன்னனைக் கொன்றிருக்கவேண்டுமென்று நினைத்து அவன் மைத்துனன் விக்ரமாதித்ய மேல சாலுக்கியன் யுத்தத்துக்கு வந்தான். 4 வருஷம் கடும் போர் நடந்தது. குலோத்துங்கன் I வெற்றிபெற்று ராஜ்பமடைந்தான்.

குலோத்துங்கன் I (993-1040) :— பால்யத்திலேயே தன் பாட்டனாருடைய பிரியத்துக்குப் பாத்திரமாகி அவனால் ஸ்வீகாரமெடுத்துக்கொள்ளப்பட்ட குலோத்துங்கன் சாலுக்கிய நாட்டிற்கும் சோழநாட்டிற்கும் மன்னனானான். தான் சோழ நாட்டிலிருந்து கொண்டு தன் ஜனக சிறிய தகப்பன் விஜயாதித்யனையே ராஜப்பிரதிநிதியாய் வெங்கியில் ஸ்தாபித்தான். இவன் காலத்தில்தான் சோழநாட்டிலிருந்து லங்கை பிரிந்தது. இவன் சேரபாண்டியர்களின் கலகங்களை அடக்கி திருவாங்கூர் எல்லைக்குச் சமீபமாயுள்ள கோட்டாற்றில் ஒரு ஸேனையை பாதுகாப்புக்காக வைத்தான். கலிங்கர், கங்கையர், இவர்கள் நாடுகளை மீளவும் சோழ நாட்டுடன் சேர்த்தான்.

உள்நாட்டுச் சுங்கவரிகளை தள்ளுபடி செய்து நிலங்களை ரீ-ஸர்வேயிற்கு கொணர்ந்தான்.

ஜயங்கொண்டசோழபுரத்தில் தன் ராஜதானியை ஏற்படுத்தியிருந்தான். சமயங்களில் காஞ்சீபுரத்தில் வஸிப்பதும் உண்டு.