பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜராஜன் III.

13


விக்ரமன் (1041-1057):— இவன் சாஸனங்களுள் ஒன்று தஞ்சாவூருக்கருகிலுள்ள திருவையாற்றில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

குலோத்துங்கன் II (1058-1068) :—

ராஜராஜன் II (1069-1093) :— பிறகு ஆண்ட சோழ மன்னர்களைப்பற்றி அதிகமாய் ஒன்றும் தெரியவில்லை. பாண்டியர் மீளவும் தம் ஸ்வாதந்திரியத்தை அடைந்திருக்க வேண்டும்.

ராஜாதிராஜன் II (1094-1100) :— பாண்டியநாட்டு ஆதிபத்யச் சணடையில் இவன் தலையிட்டுக் கொண்டான். லங்கையரசன் சோழர் விரோதிகளுடன் சேர்ந்து கொண்டு மதுரையில் வெற்றிபெற்றதும் தவிர, வடக்கேவந்து சோழ நாட்டில் பட்டுக்கோட்டை தாலூக்காவில் சில கிராமங்களைக் கொளுத்திவிட்டான். வரும்வழியில் ராமேசுவாத்தில் புகுந்து கோவில்கதவைப் பேர்த்து சிவனடியாருக்கிடைஞ்சல் செய்து கோவில் ஆபரணங்களையும் இதா ஸொத்துக்களையும் கொண்டுபோய்விட்டான். ஆனால் சோழர் அவற்றை சீக்கிரம் மீட்டனர்.

குலோத்துங்கன் III (1101-1137) :— குலோத்துங்கச்சோழன் III சிங்களரைத் தோற்கடித்து மதுரையை மீட்டு தனக்குக் கீழ்ப்பட்ட ஒருவனை பாண்டிய நாட்டினதிபதியாய் நியமித்தான்.

ராஜராஜன் III (1138-1166) :— பாண்டியர்கள் மறுபடியும் கலகம் செய்து தங்கள் மன்னன் மகாவர்ம சுந்தர பாண்டியனுடன் வந்து தஞ்சாவூர், உறையூர் முதலிய நகரங்களை அழித்தனர். ஆனால் ராஜ்யம் திரும்பவும் சோழ மன்னனிடமே கொடுக்கப்பட்டது. அவன் சாஸனங்கள் திருக்காட்டுப்பள்ளியிலும் ஸ்ரீரங்கத்திலும் அகப்பட்டிருக்கின்றன.