பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

திருச்சினப்பள்ளி புராதன சரித்திரம்.


இந்த ராஜராஜன் III 1152-ல் பல்லவர்களால் தோற்கடிக்கப்பட்டு கைதியானான். ஆனால் மேல சாலுக்கியர் ஸ்தானத்தில் இக்காலம் தோன்றிய ஹாய்ஸாலர் அவனை விடுவித்தனர். பாண்டியரிடமிருந்து சோழர் துன்புறாமல் அவரைக் காப்பாற்றிய வீரஸோமேசுவர ஹாய்ஸாலன் ஸ்ரீரங்கத்துக்குப் பக்கத்தில் ஒரு பட்டணம் நிர்மாணம் செய்து (வீரேசுவரம் - வீரசோமேசுவரபுரத்தின் நாளடைவு மாறுபாடு) அங்கே தன் ராஜதானியை ஸ்தாபித்தான்.[1]

ராஜேந்திரன் III (1167-1189) :— இவன் ஹாய்ஸாலர்களுடன் யுத்தம் செய்து வீரசோமேசுவானை 1174-ல் தோற்கடித்தான். பாண்டியரும் ஹாய்ஸாலருடன் போர் புரிந்து 1176-ல் அவர் கோமானைக் கொன்றனர். ஆனால் ஹாய்ஸாலர் பலம் மட்டும் குன்றவில்லை.


  1. சமீபகாலத்தில் பெங்களூரில் கிடைத்த செப்பு சாஸனத்திலிருந்து வீரஸோமேசுவரன் சமயபுரத்தைக் (விக்ரமபுரி) கட்டினதாகவும் அதற்கு வடக்கே பட்டணம் ரஸ்தாவுக்குக் கீழ்புறம் போஜலீசுவரர் ஆலயத்தையும் நிர்மாணம் செய்ததாகவும் தெரிகிறது. இவன் சாஸனங்கள் திருவானைக்காவல் கோவில் மதில்களிலும் ரத்தினகிரீசுவர மலையிலும் காணப்பட்டிருக்கின