பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

திருச்சினாப்பள்ளி புராதன சரித்திரம்.


அவனிடம் கோபன்னா வேஷத்துடன் சென்று பணத்தைப் பூராவும் செலுத்தி அவனுக்கு பொற்பாத தரிசனமளித்து சிறையிலுறங்கிக்கொண்டிருந்த கோபன்னாவின் தலைமாட்டில் ரசீதை வைத்துவிட்டு மறைந்தார். மறுநாள் காலையில் அதிகாரி கோபன்னாவிடம் நேரில் வந்து பொற்பாதத்தின் ரஹஸ்யத்தை வினவ கோபன்னா அவனை மலைக்கழைத்துச் சென்றார். தன் ஸன்னிதானத்திற்கு வந்த மஹமதியனுக்கு ஸ்ரீராமர் தரிசனம் கொடுத்தார். இந்த மாதிரியாக சிற்சில மஹமதியர்களுக்கு ஹிந்து மதத்தில் விசுவாஸமுண்டாகி மஹமதியர்களுள் ஹிந்து மதம் பரவ ஆரம்பித்தது. ஹிந்துக்களும் மஹமதியராவதை நிறுத்தினர். இப்படி ஹிந்துவான மஹமதியருள் ஒருவர் கபீர்தாஸர். இது நிற்க, கோபன்னாவை மறுபடியும் தாசில் வேலை பார்க்க மஹமதிய அதிகாரி உத்தரவு கொடுத்தான். ஒரு நாள் அரண்மனையில் உலாவிக்கொண்டிருந்தபோது ஸ்ரீரங்கம் ரங்கனாதர் ஆலயத்திலிருந்த ஸ்ரீராமரின் பொன் விக்கஹத்தை வைத்துக்கொண்டு அவன் குமாரி விளையாடினதைப் பார்த்த கோபன்னா 'அது ஏது' என வினவ, 'ஸ்ரீரங்கத்திலிருந்து மாலிக்காபூரினால் அது கொண்டுவரப்பட்டது' என்றறிந்து, அவ்விக்ரஹத்தைத் தந்திரமாய்க் கைப்பற்றி அதை ஸ்ரீரங்கத்தில் மறுபடியும் பிரதிஷ்டை செய்து அவ்விருத்தாந்தத்தையும் மதில் சுவர்களில் எழுதி வைத்தார்.


9-ம் அதிகாரம்.
விஜயநகர ஸமஸ்தானம்.

1232-ல் மாலிக்காபூரினால் ஹாய்ஸால ராஜ்யம் அழிக்கப்பட்ட பின்பு, துங்கபத்திரை நதிக்கரையில் ஹம்பி பிர