பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விஜயநகர ஸமஸ்தானம்

21


தேசத்தில் விஜயநகா ஸமஸ்தானம் ஸ்தாபிக்கப்பட்டது. வடக்கே துங்கபத்திரா கிருஷ்ணாவிலிருந்து தெற்கே கன்யாகுமாரிவரையில் அதன் அதிகாரம் ஏற்பட்டதால் சோழ பாண்டிய நாடுகளும் இச்சமஸ்தானத்தின் பாகங்களாய்விட்டன. விஜயநகர அரசர்களான ஹரிஹரன் I-ம் புக்காவும் 1258-முதல் 1298-வரையில் ஆண்டார்கள். தெற்கே மஹமதியர் படையெடுக்காதபடி இவர்கள் தடுத்தனர். வடமொழியில் பல கிரந்தங்கள் இயற்றிய மாதவாசார்யரும் சாயனாசார்யரும் விஜயநகர ஸமஸ்தானத்தில் மந்திரிகளாயிருந்தவர்கள். 1365-ல் அச்சமஸ்தானத்தின் ராஜதானிக்கு பெர்ஸியாவின் ராஜதுதன் ஒருவன் வந்தான். விஜயநகாத்தினுடைய மஹிமையைப்பற்றி அவனும் போர்ச்சுகீஸ் பிரயாணிகளும் எழுதியிருக்கிறார்கள். விஜயநகரத்தாரின் சிலாசாஸனங்கள் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், ரத்தினகிரீசுவா மலை, அம்பில், திருப்பளாத்துரை, திருச்சி, இவ்வூர்களில் கிடைத்திருக்கின்றன.

மாலிக்காபூர் மதுரையிலும் திருச்சினாப்பள்ளியிலும் மஹமதிய கவர்னர்களை ஏற்படுத்தியிருந்தான். அவர்கள் 1249 முதல் 1287 வரையில் ஆட்சி செலுத்தி வந்தனர். பிறகு விஜயநகரம் ஓங்கிற்று. ஸ்ரீரங்கத்திலிருந்து கொண்டு போகப்பட்ட ஸ்ரீராமர் விக்கிரஹம் 1293-ல் மறுபடியும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விஷயம் ஏற்கனவே சொல்லப்பட்டது. விஜயநகர ராஜவம்சத்தில் பிறந்த கம்பண்ண உடையான், விரூபாக்ஷன் முதலியவர் தம் ஸ்வாதீனத்தைத் திருச்சினப்பள்ளி, தென் ஆற்காடு, மதுரைப் பிரதேசங்களில் ஏற்படுத்தினார்கள். கம்பண்ண உடையானின் சிலா சாஸனங்கள் திருப்பளாத்துறையில் கிடைத்திருக்கின்றன.

ஹரிஹரன் II (1301-1328)-இன் சாஸனங்கள் திருச்சியிலேயே கிடைத்திருக்கின்றன.