பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

திருச்சினாப்பள்ளி புராதன சரித்திரம்.


கிருஷ்ண ராஜ(ய) தேவன் (1431-1451) :— இவன் மத வைராக்கியத்துக்கும் ஜனசுச்ரூஷைக்கும் பேர்போன தர்மப் பிரபுவாய் விளங்கினான். இவன்தான் ஸ்ரீரங்கத்தில் வெளிப்பிராகாரத்தையும் ராஜ(ய)கோபுரத்தையும் கட்டினான். கோபுரத்தின் நீளம் 130 அடி, அகலம் 100 அடி, உயரம் 43 அடி ; வாசல் கதவு நிலையின் உயரம் 23 அடி. இது கட்டி முடியுமுன் மஹமதியருடன் சண்டையுண்டாய்விட்டது. ஆதலால் கோபுரம் முடிவுபெறவில்லை. இவன் மந்திரி சேஷராஜ(ய)ன் ஸ்ரீரங்கத்தில் ஆயிரக்கால் மண்டபத்துக்கெதிரில் ஒரு மண்டபம் கட்டினான். அது இப்பொழுதும் சேஷராஜ(ய)ன் மண்டபம் எனப் பெயர் பூண்டிருக்கிறது. கிருஷ்ணராஜ(ய)தேவனின் சாஸனங்கள் திருப்பளாத்துரையில் கிடைத்கிருக்கின்றன.

அச்யுதராஜ(ய) தேவன் (1452-1464) :— இவன் ஆண்ட காலத்தில் திருவாங்கூர் அரசன் பாண்டிய நாட்டை ஜயித்து விஜயநகரத்தாருடன் சண்டைக்கு வந்தான். ஆனால் அவன் தோற்கடிக்கப்பட்டு தாம்பிரபர்ணி வரையில் துரத்தப்பட்டான். அந்நதிமத்தியில் ஜய ஸ்தம்பத்தை நாட்டி விட்டுத் திருவாங்கூர் அரசனிடம் கப்பம் பெற்றுத் திரும்புகையில் அச்யுதராஜ(ய) தேவன் பாண்டிய அரசன் குமாரியை மணம்புரிந்தான்.

1480-ல் உரையூரிலிருந்து சோழ வம்சத்தானொருவன் பாண்டியனுடன் யுத்தம் செய்து அவன் ஊரைப்பிடுங்கிக்கொண்டான். பாண்டியன் விஜயநகரத்தாரை உதவி கேட்க நாகம்மா நாயக்கன் தெற்கே வந்து சோழனைவென்று பாண்டியனுக்கு உதவிசெய்வதற்குப் பதிலாகத் தானே மதுரையில் அரசு செலுத்த ஆரம்பித்தான். நாகம்மாவின் தலையைக் கொண்டுவர விஜயநகரத்திலிருந்து அவன் குமாரன் விசுவனாத நாயக்கன் அனுப்பப்பட்டான். தகப்பனும்