பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசுவனாத நாயக்கன்

23


குமாரனும் சேர்ந்து யோஜனை செய்து நாகம்மா மன்னிப்புக் கேட்க அவனே தென்னாட்டி னதிகாரத்தைப் பெற்றான். காலக்கிரமத்தில் அவன் சந்ததியார் கப்பம்கட்டுவதை நிறுத்தி தாமே அரசர் பதவியை பேர் நீங்கலாக அடைந்தனர். நாயக்கர் ஆளுகையில் சோழ பாண்டியர் என்ன நிலைமையிலிருந்தார் என்று சொல்லமுடியாது. அவர்களைப்பற்றி சரித்திர ஆராய்ச்சியில் ஒரு சமாசாரமும் கிடைக்கவில்லை.

ராமராஜ(ய)தேவன் :— இவன் 1487-ல் ஹம்பி பிரதேசத்தில் நடந்த யுத்தத்தில் மஹமதியரால் தோற்கடிக்கப்பட்டு உயிர் துறந்தான். ராஜதானியும் பாழாக்கப்பட்டது. பிறகு ஆண்ட அரசர்கள் பெனுகொண்டாவிலிருந்தும், அதற்குப்பிறகு சந்திரகிரியிலிருந்தும் அரசு செலுத்திவந்தார்கள். சந்திரகிரியரசன் ஒருவன் 1562-ல் இங்கிவீஷ் கம்பெனிக்கு மைலாப்பூருக்கு வடக்கேயுள்ள பூமியை விற்றான். அங்கேதான் ஸென்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அவனால் எழுதிக்கொடுக்கப்பட்ட ஸ்வர்ணத் தகட்டு கிரயசாஸனப்பத்திரமும் அங்கேயே இருந்தது. 1668 முதல் 1671 வரையில் பிரஞ்சார் சென்னையைத் தம் ஸ்வாதீனமாக்கினர். அக்காலத்திற்குப் பிறகு அவ்விடம் ஸ்வர்ணத்தகடு காணப்படவில்லை.


10-ம் அதிகாரம்.
நாயக்கர்.

விசுவனாத நாயக்கன் (1431-1485) :— இவன் ஆக்ஷி திருச்சினாப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் முதலிய ஜில்லாக்களில் ஏற்பட்டது. தஞ்சாவூர் நாயக்கனுக்கு வல்லத்தைக் கொடுத்து அதற்குப்பதிலாய் ஸ்ரீரங்கத்தைப் பரிவர்த்தனை செய்து கொண்டான். திருச்சியில் கோ