பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருச்சினாப்பள்ளி புராதன சரித்திரம்.

24


ட்டைச்சுவர்களை பலப்படுத்தி மலைக்கோட்டைத்தெருவை கட்டி தெப்பக்குளத்தையும் வெட்டினான். கோட்டையைச் சுற்றி இரட்டை மதில் சுவர்கள் கட்டி அகிழ்களை வெட்டி அவ்வகிழ்களுக்கு காவேரியிலிருந்து ஜலம் வரும்படி ஏற்பாடு செய்தான். கோட்டைக்கு நாற்புரங்களிலும் கோபுரங்கள் கட்டி வாசல்கள் ஏற்படுத்தினான். இப்பொழுது இருக்கும் மெய்ன் கார்டு கேட் தான் மேலவாசல்.[1] இவன் ஸ்ரீரங்கம் கோவிலிற்கு விசேஷ திருப்பணிகளும் செய்தான். திருட்டு முதலிய குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு சிலரை பாளையக்காரராய் அமர்த்தி அவருக்கு நிலம் கொடுத்து யுத்தகாலங்களில் அவர் தனக்கு உதவிசெய்யும்படி ஏற்பாடு செய்தான். திருச்சியில் தாலூகா கச்சேரி இருக்குமிடத்தில் தான் இவன் அரண்மனையிருந்தது. சர்க்கார் பாளையம் இவனுடைய பாளையம்.

குமார கிருஷ்ணப்பன் (1486-1495):— இவன் விசுவனாதன் குமாரன். இவன் லங்கையை ஜயித்தான். 1524 வரையில் ஆண்ட இவன் சந்ததியாரைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை.

முத்துகிருஷ்ணப்பன் (1524-1531) :— சேதுபந்த ராமேசுவரத்திற்குப் போய்வரும் யாத்திரிகரின் ரக்ஷணார்த்தம் ராமனாதபுரத்தில் சேதுபதி வம்சத்தை இவன் ஸ்தாபித்தான்.

முத்துவீரப்பன் (1532-1545) :—

திருமலை நாயக்கன் (1546-1581) :- விஜயநகரத்தில் 1487-ல் நடந்த சண்டையில் விஜயநகர அரசன் தோற்கடிக்கப்பட்டு ராஜதானியும் வேறு இடத்துக்கு மாற்றப்

  1. கோட்டை ரெயில் ஸ்டேஷனுக்கும் மேலவாசல் என்ற பெயர் சிலர் கொடுத்திருக்கின்றனர். மெய்ன் கார்டு கேட்டுக்கு சமீபத்தில் அது ஏற்பட்டது தான் அப்பெயருக்குக் காரணம்.