பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

திருமலைநாயக்கன்.


பட்டதால் இவன் கப்பங் கட்டுவதை நிறுத்திவிட்டான். 1562-ல் சந்திரகிரியாசன் ரங்கராஜ(ய) தேவன் தென்னாட்டிற்கு வந்தான். திருமலையின் தூண்டுதலின் பேரில் கோல்கொண்டா ஸூல்டான் சந்திரகிரியை தாக்கவே அவன் திரும்பிவிட்டான், மஹமதியர் அவனைத் தோற்கடித்து விட்டு 1566-ல் தெற்கே வந்து ஜிஞ்ஜிக்கோட்டையை முற்றுகை போட்டனர். பீஜப்பூர் ஸுல்டானிடமிருந்து திருமலையின் உதவிக்காக வந்த மஹமதிய போர்வீரர் தம்மினத்தாருடன் சேர்ந்து கொண்டு திருமலையை மதுரைக்கு விரட்டியடித்தார். பிறகு மஹமதியர் தஞ்சாவூருக்குச் சென்று அந்த நாயக்கனிடமிருந்தும் திருமலையினிடமிருந்தும் கப்பம் பெற்று வடக்கே திரும்பினர்.

தனக்கு விரோதமாய் சந்திரகிரியாசனுக்கு மைசூர் மன்னன் உதவி செய்ததற்காக திருமலை மஹமதியரின் உதவியைக்கொண்டு மைசூரைத் தாக்கினான். நடந்த யுத்தத்தில் மைசூரார் அடக்கப்பட்டனர். விஜயநகர ராஜவம்சமும் இருந்தவிடம் தெரியாமல் போயிற்று. திரும்பவும் மஹமதியருக்கு திருமலையும் தஞ்சாவூர் நாயக்கனும் ஏராளமாய்ப் பொருள் தானம் செய்தனர்.

திருமலையின் மேல் கோபங்கொண்ட மைசூராசன் கோயம்புத்தூரைப் பிடித்துக்கொண்டு மதுரையைத் தாக்கினான். மைசூரார் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டார். திருமலையின் சகோதரன் மைசூர் நாட்டினுட்சென்று அரசனைப் பிடித்து அவன் மூக்கையறுத்து அதை மதுரைக்கனுப்பினான்.

1581-ல் திருமலையிறந்தபோது அவன் அதிகாரத்தின் கீழ் திருச்சினாப்பள்ளி, மதுரை, ராமனாதபுரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், புதுக்கோட்டை, திருவாங்கூர் முதலியவையிருந்தன. அவன் ராஜதானி மதுரை;