பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மங்கம்மாள்.

27


இந்த சமயத்தில் மைசூர் சிக்க தேவராஜ உடையான் கோயம்புத்தூரைப் பிடித்துக்கொண்டான். சொக்கனாதன் ஒன்றும் செய்யமுடியவில்லை. அவன் மந்திரிகள் அவனைத் துலைத்துவிட்டு அவன் சகோதரனை அவன் ஸ்தானத்தில் வைத்தார்கள். 1600-ல் மஹமதியர் உதவியைக்கொண்டு சொக்கனாதன் தன் சிம்ஹாஸனத்தை மீட்டான். 1604-ல் மைசூரார் திரும்பவும் திருச்சிக்கு வந்தார்கள். மஹாராஷ்டிரர் மைசூராரைத் தோற்கடித்து திருச்சியை வளைத்துக் கொண்டார். துக்கத்தால் சொக்கனாதனுமிறந்தான்.

ரங்க கிருஷ்ண முத்து வீரப்பன் (1605-1611) :— நாயக்கர் ராஜ்யத்தின் விஸ்தீர்ணம் குரைந்து போய்விட்டது. மைசூராரும் மஹாராஷ்ட்ரரும் கொள்ளை கொண்டது போக மீதிதான் இவனுக்குக் கிடைத்தது. 1607-ல் தன் ராஜதானியையும் ராஜ்யத்தில் ஒருபான்மையையும் திரும்ப அடைந்தான். இந்த சமயத்தில் தென்னாட்டிற்கே ஒரு புதுச் சத்துருவேற்பட்டான். 1607-முதல் தான் இறந்த 1629 வரை டெல்லி சக்ரவர்த்தி அவுரங்கஸீப் தக்ஷிணத்திலேயே தங்கினான்.

மங்கம்மாள் (1612-1626) :— அவன் குமாரன் பால்யமாயிருந்தபடியால் அவனன்னை மங்கம்மாள் ஆக்ஷிபுரிந்தாள். இவள் அநேக கோவில் திருப்பணிகள் செய்தாள். நிழல் தரும் விருக்ஷங்களை ரஸ்தாக்களின் இருபுறமும் நட்டாள். ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபத்தைக் கட்டினாள். திருச்சியில் டவுன் ஹாலென விளங்கும் கொலுமண்டபத்தைக் கட்டி அதிலிருந்து நகர பரிபாலனம் செய்தாள். மணப்பாரையில் ஒரு முசாபுரி பங்களாவைக் கட்டினாள். உய்யக்கொண்டானின் இடிந்து போன பாலத்தைப் புதுப்பித்தாள்.

புத்தூரிலிருந்து அரைமைல் மேற்கே உய்யக்கொண்டான் சில பாறைகளின் மேல் ஓடுகிறது. அதுவே திருச்