பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

திருச்சினாப்பள்ளி புராதன சரித்திரம்.


சியில் உய்யக்கொண்டான் ஓடும் மேட்டுப் பிரதேசம். காவேரி வெள்ளம் உய்யக்கொண்டானில் தாக்கினால் ஊருக்கே அனர்த்தம் விளையுமென்று கண்டு அப்பாறைகளின் மேல் அதிக ஜலம் தானே வழிந்து ஓடி குடமுருட்டி வழியாய்க் காவேரியிலேயே விழும்படி ஏற்பட்டுள்ள அணையை மங்கம்மாள் தான் கட்டினது. சத்துருக்கள் குடி தண்ணீரில் விஷம் கலக்காமல் பாதுகாக்க உய்யக்கொண்டான் திருமலையிலும் ரத்தினகிரீசுவர மலையிலும் சிறு காவல் ஸேனைகளை (out-post) ஸ்தாபித்தாள். உய்யக்கொண்டானிலிருந்து ஊரிலுள்ள 64 குளங்களுக்கும் பூமிக்கடி வழியே ஜலம் செல்லும்படி ஏற்பாடும் செய்தாள்.

1615-ல் அவுரங்கஸீப்பின் ஸேனைத்தலைவன் ஒருவன் ஸுல்பிகர்கான் என்பான் திருச்சி தஞ்சைக்குவந்து கப்பம் பெற்றுச் சென்றான். 1617-ல் மைசூரார் திருச்சியைத் தாக்கினார் ; வடக்கேயிருந்து மஹமதியர் மைசூர்மேல் படையெடுக்க ஊருக்குத் திரும்பிவிட்டனர்.

விஜயரங்க சொக்கநாதன் (1627-1653) :— மங்கம்மாளின் பௌத்ரன் விஜயரங்க சொக்கனாதன் பட்டத்துக்கு வந்த பிறகு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அநேக திருப்பணிகள் செய்தான். அவைகளில் இருப்பதினாயிரம் ரூபாய் பொறுமான தங்கக்குடம் ஒன்று. இவனுடையவும் இவன் குடும் பத்தாருடையவும் தந்தபிரதிமைகள் ஸ்ரீரங்கம் கோவிலில் வைக்கப்பட்டிருக்கின்றன.

மீனாக்ஷி (1654-1658) :— விஜயரங்க சொக்கனாதனுக்குக் குமாரனில்லை. அவன் மனைவி மீனாக்ஷி வங்காருதிருமலையின் குமாரனை ஸ்வீகாரம் எடுத்துக்கொண்டாள். 1656-ல் வங்காரு தனக்கு ராஜப்ரதிநிதித்வம் வேண்டுமென்று கலகம் செய்தான். அதே சமயத்தில் ஆர்க்காட்டி