பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மீனாக்ஷி

29


விருந்து ஸப்தார் அவி கானும் சண்டா சாஹிப்பும் பெரும் படையுடன் தெற்கே வந்தனர்.[1]

மஹமதியர் தஞ்சாவூர் மார்க்கமாய் மதுரை திருநெல்வேலிக்குச் சென்றுத் திரும்புகாலில் மீனாக்ஷிக்கும் வங்காரு திருமலைக்கும் மத்தியஸ்தம் செய்வதாய் ஒப்புக்கொண்டனர். வங்காருவினிடம் 30 லக்ஷம் ரூபாய்க்குச் சீட்டுப் பெற்றான் ஸப்தார் அலி கான். சண்டாசாஹிப்போ மீனாக்ஷியிடம் கோடி ரூபாய்க்குச் சீட்டு வாங்கிக்கொண்டு, செங்கல்லைப் பட்டினால் போற்றி, அதையே கொரான் என்று சொல்லி, அவளைக் காப்பாற்றுவதாய் அதன் மேல் ஆணையிட்டான். ஆனாவிருவரும் ஒரு காரியமும் செய்யாமல் ஆர்க்காட்டுக்குச் சென்று விட்டனர். மீனாக்ஷியும் வங்காருவும் தம் சண்டையைத்தாமே தீர்த்துக்கொண்டனர். மதுரையும் திருநெல்வேலியும் வங்காரு வீதத்துக்குக் கிடைத்தன.

1658-ல் சண்டாசாஹிப் திரும்பவும் திருச்சிக்கு வந்து மீனாக்ஷியை கைதியாக்கி அவளை மானபங்கப்படுத்த யத்தனித்ததில் அவள் விஷம் உண்டு உயிர் துறந்தாள். அவளுடன் நாயக்கர் வம்ச ஆளுகையும் முடிவு பெற்றது. வங்காருவைத் தோற்கடித்துவிட்டு, சண்டாசாஹிப், மைசூராருக்குச் சொந்தமான கரூரைப் பிடித்துக்கொண்டு, திருச்சியில் அதிகாரம் செலுத்த ஆரம்பித்தான்.


  1. 1615-ல் மங்கம்மாளிடம் ஸுல்பிகர்கான் கப்பம் பெற்றுப் போன பிறகு கொள்ளிடத்திற்கு வடக்கேயுள்ள கர்னாடகம் (1620-லிருந்து) மஹமதிய நவாபால் ஆளப்பட்டது. டெல்லி சக்ரவர்த்திக்குக்கீழ் அதிகாரம் செலுத்தினவன் தக்ஷிண ராஜப்ரதிநிதியாகிய நிஜாம் ஆனான்.