பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலோ பிரஞ்சு கர்னாடக முதல் யுத்தம்.

33


தஞ்சாவூர் மன்னனும் புதுக்கோட்டை தொண்டமானும் மஹமடாலி கக்ஷியில் சேர்ந்தார்கள். தஞ்சாவூரைக் கொள்ளையடிக்க நினைத்துச் சென்ற சண்டாசாஹிப் மஹாராஷ்டரராலும் மைசூராராலும் மேஜர் லாரன்ஸாலும் உதவி செய்யப்பட்ட நாஸர் ஜங்வின் வருகையைக் கேள்விப்பட்டு புதுச்சேரிக்கு ஓடிவிட்டான். முஸபர் ஜங்ஙை அவன் சிறிய தகப்பன் சிறையிலடைத்தான். ஆனாலவனே கொலை செய்யப்பட்டமையால் முஸபர்ஜங் விடுதலையடைந்து நிஜாமானான்.

இங்கிலீஷார் மஹமடாலிக்கு உதவி செய்யும் பொருட்டு ஸென்ட் டேவிட் கோட்டையிலிருந்து காப்டன் கோப்பை அனுப்பினார்கள். மதுரையில் நிகழ்ந்த ஒரு கலகத்தையடக்க அவன் சென்றான். புதுச்சேரியிலிருந்து சண்டாசாஹிப் தெற்கே வரயத்தனித்தபடியால் காப்டன் ஜின்ஜென் ஒரு பெரிய படையுடன்வந்து வாலிக்கொண்டா புரத்தில் ஒரு தோப்பில் தங்கினான். சண்டாசாஹிப் 4 மைலுக்கப்பாலிருந்து சண்டை செய்து ஆங்கிலரைத் தோற்கடித்து ஊட்டத்தூருக்கு ஓட்டிவிட்டான். அப்படி ஓடின ஆங்கிலருள் ஒருவன் லெப்டினன்ட் க்ளைவ் (1672.)

பிரஞ்சாரும் சண்டாசாஹிப்பும் இங்கிலீஷாரைத் துரத்திவந்து மறுபடியும் தோற்கடித்தனர். ஆங்கிலர் பிக்ஷாண்டார் கோவில் வழியாய் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து, பிறகு திருச்சியை யடைந்தார்கள். அவர்களைத் துரத்திவந்த சண்டாசாஹிப்பும் பிரஞ்சாரும் ஸ்ரீரங்கத்தில் ஒரு ஸேணையை வைத்து விட்டு காவேரியைத் தாண்டி திருச்சினாப்பள்ளிக்குக் கிழக்கே தங்கினார்கள். அவர் வரிசை ஸர்க்கார் பாளையத்திலிருந்து பிரஞ்சு பாறைவரையிலும் அங்கிருந்து எறும்பேசுவரம் வரையிலும் நின்றது. வேறொரு ஸேனையுடன் வந்த மேஜர் லாரென்ஸ் எறும்பே

திரு

3