பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

திருச்சினாப்பள்ளி புராதன சரித்திரம்.


சுவரத்திற்குத் தெற்கே சென்று பொன்மலை மார்க்கமாய் திருச்சிக்குள் வர முயன்றான். மைசூராரும் நவாப்பின் சேனைகளும் காப்டன் டால்டனும் அவனுடன் சேர்ந்தார்கள். பிரஞ்சார் தோற்கடிக்கப்பட்டுக் காவேரிக்கு வடக்கே துரத்தப்பட்டனர். ஆனால் லாரென்ஸ் அவரைப் பின் தொடரவில்லை.

இதற்குள் ஆர்க்காட்டை க்ளைவ் பிடித்துக்கொண்டு 50 நாள் முற்றுகையிலும் வெற்றியடைந்தான். திருச்சியைவிட்டு சண்டா சாஹிப் சேனையும் வடக்கே துரத்தப்பட்டமையால் களைவ் தெற்கே வந்தான். வரும் வழியில் சமயபுரமும் மண்ணச்சநல்லூரும் திருத்தவத்துரை என்ற லால்குடியும் பிடிக்கப்பட்டன.

புதுச்சேரியிலிருந்து ட்யூப்ளே அனுப்பிய பிரஞ்சார் ஊட்டத்தூர்வந்து சேர்ந்தார். அவரைத் தெற்கே வராமல் தடுக்க க்ளைவ் சென்றான். அவனைப் பின்புறமிருந்து தாக்க ஸ்ரீரங்கத்திலிருந்த பிரஞ்சார் சென்றனர். க்ளைவ் ஊட்டத்தூர் போகாமல் சமயபுரத்திலேயே தங்கிவிட்டான். ஸ்ரீரங்கத்திலிருந்துவந்த பிரஞ்சார் பாதிராத்திரியில் சமயபுரத்தை யடைந்தார். வெகு சாமர்த்தியமாய் க்ளைவ் அவரைத் தோற்கடித்து எல்லோரையும் சிறையோ கொலையோ செய்துவிட்டான். டால்டன் ஊட்டத்தூரில் பிரஞ்சாரை எதிர்க்க அவர் ரஞ்சன்குடிக்கு ஓடினர். களைவும் டால்டனும் மறுபடியும் அவரைத்தாக்க அவர் சரணமடைக்தனர்.

பிறகு களைவ் பிக்ஷாண்டார் கோவிலுக்குச் சென்றான். பிரஞ்சார் தங்கியிருந்த கோவிலுக்கு 200 கஜம் வடக்கேயுள்ள கிராமத்திலிருந்து கொண்டு தன் பீரங்கிகளால் அக் கோவிலையும் முழு வெள்ளத்துடன் இருந்த கொள்ளிடத்திற்குத் தென்புறமுள்ள ஸ்ரீரங்கம் கோவிலையும் தாக்கி