பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலோ பிரஞ்சு கர்னாடக இரண்டாவது யுத்தம்.

35


னான். ஸ்ரீரங்கமும் பிடிக்கப்பட்டது. சண்டாசாஹிப் ஸைன்யம் சரணமடைந்தது. அவனும் நிர்க்கதியாய் இங்கிளிஷாருக்கு உதவிசெய்துக்கொண்டிருந்த தஞ்சாவூர் சேனாபதியைச் சரணமடைந்தான். அவன் அவனைக் கொன்று தலையைத் தஞ்சாவூருக்கனுப்பிவிட்டான். பிரஞ்சாரும் சரணமடைந்தனர். சண்டா சாஹிப்பின் தலையில்லாமுண்டம் திருச்சினாப்பள்ளியில் நத்தர்ஷா பள்ளிவாசலில் புதைக்கப்பட்டது.

டால்டனை ஒருசிறு ஸேனையுடன் திருச்சியில் நிறுத்திவிட்டு லாரென்ஸ் சென்னைக்குப் புறப்பட்டான்.


13-ம் அதிகாரம்.
ஆங்கிலோ பிரஞ்சு கர்னடக இரண்டாவது யுத்தம்.

ட்யூப்ளேயின் சூழ்ச்சியினால் மைசூராரும் முரஹரிராவும் மஹமடாலி கக்ஷியைவிட்டு நீங்கினர். டால்டன் மைசூராரை ஸ்ரீரங்கத்தில் தாக்கினான். அவன் தோற்கடிக்கப்பட்டு திருச்சிக்கு ஓடிவர (1675), அவரால் வளைந்து கொள்ளப்பட்டான். திருவையாற்றில் பிரஞ்சு, மஹாராஷ்ட்ரருடன் சண்டை செய்து கொண்டிருந்த லாரென்ஸ் திருச்சிக்கு வந்தான். அதே சமயத்தில் மைசூராருக்கு உதவிசெய்ய பிரஞ்சு மஹாராஷ்ட்ர ஸைன்யங்களும் வந்தன.

ஸ்ரீரங்கத்திலிருந்த பிரஞ்சு மைசூராரை லாரென்ஸ் முத்தரசநல்லூரிலிருந்து தாக்கினான். ஒன்றும் பலிக்கவில்லை. பிரஞ்சாரிடம் யுத்தப்பயிற்சி பெற்ற தகுந்த தலைவர் பலர் இருந்தனரென்பதும் ஸ்ரீரங்கத்தைவிட்டு அவர்களைத் துரத்த முடியாதென்பதும் லாரென்ஸுக்குப் புலப்-