பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

திருச்சினாப்பள்ளி புராதன சரித்திரம்.


பட்டது. பிறகு அவன் பக்கிரித் தோப்பில் தங்கினான். புதுக்கோட்டை, தஞ்சாவூருடன் அவன் போக்குவரவு செய்வதைத் தடுக்க பிரஞ்சார் அவனுக்குத் தென்புரம் தங்கினார் . லாரென்ஸ் பக்கிரிப்பாறைக்குச் சென்றான். அங்கிருந்து அவன் துரத்தப்படவே, நின்று யுத்தம் செய்தான். பிரஞ்சார் தோற்கடிக்கப்பட்டு அந்த ப்ரதேசத்தைவிட்டு நகந்தனர்.

டால்டனைத் திருச்சியில் வைத்து விட்டு லாரென்ஸ் சஞ்சாவூருக்குச் சென்றுத் திரும்புகையில் பிரஞ்சார் அவனைத்தடுக்கும் பொருட்டு பிரஞ்சுப் பாறையிலிருந்து பக்கிரிப்பாறைவரையிலும் நின்றார். லாரென்ஸ் அவரைத் தோற்கடித்துத் திருச்சிக்குள் வந்தான்.

உய்யக்கொண்டான் திருமலையில் தங்கியிருந்த பிரஞ்சாரைத் தாக்கச்சென்றான் லாரென்ஸ். அவர் முத்தரசநல்லூருக்கு ஓடினார். லாரென்ஸ் மலையைப் பிடித்துக்கொள்ளாததால் அவர் திரும்ப வந்து விட்டனர்.

காவேரிக்குத் தெற்கிலேயே இருந்து கொண்டுத் தங்களுக்குச் சாமான்கள் வந்து சேருவதை பிரஞ்சார் தடுத்துக்கொண்டே யிருந்ததால் லாரென்ஸ் பெருமுயற்சி யெடுத்து அவரைத்தாக்க பிரஞ்சுபாறையில் தங்கினான். பிரஞ்சாரும் கற்கண்டுப் பாறையில் தங்கினர். நடந்த யுத்தத்தில் பிரஞ்சார் தோற்கடிக்கப்பட்டு காவேரிக்கு வடக்கே துரத்தப்பட்டனர்.

உய்யக்கொண்டான் திருமலையிலிருந்த பிரஞ்சாரும் லாரென்ஸால் துரத்தியடிக்கப்பட்டனர்.

பிறகு லாரென்ஸ் தஞ்சாவூருக்குச் சென்றான். பிரஞ்சார் கடைசியாக திருச்சிக்கு வர ஒரு இராமுயற்சியெடுத்து கோட்டைக்கு வடமேற்கிலிருந்த டால்டன் பாட்டெரி