பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலோ பிரஞ்சு கர்னாடக இரண்டாவது யுத்தம்.

37


யைத் தாக்கினர். இந்த பாட்டெரியைச்சுற்றி ஒரு அகிழும் அகிழில் ஒரு பாறையுமிருந்தன. கோட்டையின் வெளிச்சுவற்றிற்கு வெளியேயிருந்த இந்த பாட்டெரியிலிருந்து தெப்பக்குளத்தின் தென்மேற்கு மூலையிலுள்ள மெய்ன் கார்ட்கேட் வரையில் பந்தோபஸ்து செய்யப்பட்டிருந்தது. வெளிச்சுவருக்கும் உள்சுவருக்கும் மத்தியில் வளைந்து வளைந்து சென்ற ஒரு பாதைவழியேதான் கோட்டை மேலவாசலுக்கு வரக்கூடும்.

அகிழில் பாறையிருந்ததால் இரவில் சுலபமாய் ஏணிகளைக்கொண்டு பிரஞ்சார் பாட்டெரிமேல் ஏறிவிட்டனர். தூங்கிக்கொண்டிருந்த காவலாளிகளைக் கொன்று விட்டு சத்தம் செய்யாமல் பீரங்கிகளைக் கைப்பற்றினர். சிலர் இருட்டில் வாசலுக்குவர யத்தனித்ததில் அகஸ்மாத்தாய் ஒரு குழியில் விழுந்து உதவிக்குக் கத்தினர். பாட்டெரிமேவிருந்த பீரங்கிகளும் கோட்டையின் பேரிலேயே திருப்பப்பட்டன.

லெப்டினன்ட் ஹாரிஸன் கேட்டின் மேல்சுவரில் ஏறி நின்றான். பிரஞ்சாரில் சிலர் வெளிச்சுவருக்கும் உள்சுவருக்கும் மத்தியிலுள்ள பாதைவழியே கதவை உடைக்க இருப்புலக்கைகளுடன் வந்தனர். ஆங்கில ஸேனையிலிருந்து ஓடிவிட்ட ஒருவன் அவருக்கு வழிகாட்டினான். வேறு சிலர் ஏணிகளைக்கொண்டு சுவரேற யத்தனித்தனர். கேட்டின் மேலிருந்த இங்கிலீஷார் இருட்டில் ஒன்றும் தெரியாமல் சுட்டுக்கொண்டே யிருந்தனர். தெய்வ ஸங்கல்பமாய் வழிகாட்டியும் இருப்புலக்கைக்காரரும் கொல்லப்பட்டனர்; ஏணிகளும் ஒடிந்து விட்டன ; பிரஞ்சாரும் பயந்து திரும்பியோடினதில் அகிழிலும் பாறையின் மேலும் குதித்து தங்களையே காயப்படுத்தி அல்லது கொன்று கொண்டார்கள். பாட்டெரியிலிருந்தவர் கோட்டையின்