பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலோ பிரஞ்சு கர்னாடக மூன்றாவது யுத்தம்.

39


ஞ்சார் தோற்கடிக்கப்பட்டனர். சண்டையினால் அலுப்படைந்த பிரஞ்சு கவர்ன்மெண்டார் ட்யூப்ளேயை ஊருக்கழைத்தார்கள். சமாதானம் செய்து கொள்ளப்பட்டு சண்டையும் நிறுத்தப்பட்டது.


14-ம் அதிகாரம்.
ஆங்கிலோ-பிரஞ்சு கர்னாடக மூன்றாவது யுத்தம்.

1677-ல் நிஜாம் சைசூரின் மேல் படையெடுத்தான். ஆகையால் சைசூரார் ஸ்ரீரங்கத்தை விட்டகன்றனர். திருச்சிக்கருகாமையிலிருந்த பிரஞ்சார் கப்பம் வாங்கும் பொருட்டு துரையூர் ஜமீனைத் தாக்க யத்தனித்தனர். அரியலூருக்குள்ளும் உடையார்பாளையத்துக்குள்ளும் செல்ல ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆங்கில சேனைத் தலைவன் கெய்ல்லாட் அவரைப் பயமுறுத்தி வடக்கே போகாமல் தடுத்துவிட்டான்.

1679-ல் கர்னாடகத்தில் இரு தேசத்தாரும் மறுபடியும் யுத்தம் செய்தனர். கெய்ல்லாட் மதுரையிலிருந்தான். பிரஞ்சு சேனை திருச்சிக்கு வந்தது. பிரஞ்சாரை சாமர்த்தியமாய் ஏமாற்றி விட்டு கெய்ல்லாட் திருச்சிக்கு வந்தான். ஒன்றும் செய்யாமல் பிரஞ்சாரும் புதுச்சேரிக்குப் போய் விட்டனர்.

1680 சித்திரையில் பிரஞ்சார் ஸ்ரீரங்கத்தை ஹைடர் அலியின் சகோதரனிடம் விட்டுவிட்டு தாம் வேறு பக்கம் சென்றனர். ஜோசப் ஸ்மித் மைசூராரைத் துரத்திவிட்டு ஸ்ரீரங்கத்தைப் பிடித்துக்கொண்டான்.

வைகாசி மாசக்கடைசியில் புதிதாய்வந்த பிரஞ்சு கவர்னர் கௌண்ட் டி லாலி தாஞ்சாவூரைத் தாக்கி முற்றும்