பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

திருச்சினாப்பள்ளி புராதன சரித்திரம்.


தோல்வியடைந்தான். யுத்தரங்கம் பிறகு மாறிவிட்டது. லாலியும் சென்ட் டேவிட் கோட்டையைப் பிடித்துக் கொண்டு சென்னையை முற்றுகை போட்டான்.

1681-ல் பிரஞ்சார் ஊட்டத்தூர் வரையில் சென்றனர். சிலமாதங்கழித்து ஸ்ரீரங்கத்தைப் பிடித்துக்கொண்டு பிக்ஷாண்டார் கோவிலைப் பந்தோபஸ்துப்படுத்தினர். திருச்சியிலிருந்து காப்டன் ரிச்சர்ட் ஸ்மித் வடக்கே சென்று, சமய புரத்திலிருந்து தனக்கு உதவிக்காக வந்த சேனையைச் சேர்த்துக்கொண்டு, பிக்ஷாண்டார் கோவிலைத் தாக்கினான். பிரஞ்சு பீரங்கிகளின் உக்ரத்தைத் தாங்கமுடியாமல் ஆங்கிலர் பின் வாங்கினர். வாண்டிவாஷில் பிரஞ்சார் தோற்றுப்போன செய்தி வந்தமையால் அவர் தாமே பிக்ஷாண்டார் கோவிலைவிட்டு விலகினர்.

1682-ல், பிரஞ்சாருக்கு ஹைடர் உதவி செய்ததின் நிமித்தம், காப்டன் ரிச்சர்ட் ஸ்மித் மைசூராருக்குச் சொந்தமான கரூரைத் தாக்கினான். கரூரிலிருந்த சேனைத்தலைவன் தனக்கும் ஹைடருக்கும் சம்பந்தமில்லை யென்றும் தான் மைசூர் அரசன் ஆதரவினின்று விலகிவிட்டதாகவும் சொல்லிக்கொண்டு ஊரைக் காலி செய்துவிட்டு மைசூராருடைய நாமக்கல்லுக்குச் சென்றான்.

1683 தை மாசத்தில் ஸர் ஐர் கூட் புதுச்சேரியைப் பிடித்தமையால் பிரஞ்சார் தம் மஹிமை பூராவையுமிழர்தனர். இரண்டு வருஷம் கழித்து பாரிஸ் நகரத்தில் உடன்படிக்கை செய்யப்பட்டது. மஹம்மடாலியைக் கர்னாடக நவாப்பாக பிரஞ்சார் ஒப்புக்கொண்டனர். கரூரை இங்கிலிஷாரும் நாமக்கல்லை மைசூராரும் வைத்துக்கொண்டனர்.