பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

திருச்சினாப்பள்ளி புராதன சரித்திரம்.


பாரததேசம் 10 மாகாணங்களாய்ப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு கவர்னர் நியமிக்கப்படுகிறான். இக்கவர்னர் பதவி ஆங்கிலச் சீமானுக்குத்தான் கிடைக்கும். சில வருஷங்களுக்கு முன் லார்ட் ஸின்ஹா என்ற ஒரு இந்தியனுக்கு இப்பதவி ஸ்வல்பகாலத்திற்கு கிடைத்தது. கவர்னர் ஜெனரலுக்கு இருக்கும் மாதிரி கவர்னருக்கும் Executive Council உண்டு. அதிலும் ஒரு இந்தியன் இருக்கிறான்.

இந்தியாவை ஆளுவதில் சர்க்காருக்கு சட்ட திட்டங்கள் செய்வதில் உதவி செய்ய 4 (சம்பளம் இல்லாத அங்கத்தினருள்ள) சபைகள் உண்டு. இவைகளுள் Legislative Council என்பது ஒவ்வொரு மாகாணத்திலும் ஏற்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதற்கும் பொதுவாயுள்ளது Legislative Assembly-யும் Council of State-ம் ஸ்வதேச சிற்றரசர்களின் சபையொன்றும் உண்டு.

நாமிருக்கும் சென்னை ராஜதானி 25 ரெவினியூ ஜில்லாக்களாய் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஜில்லாவிற்கும் ஒரு கலெக்டர் நியமிக்கப்பட்டிருக்கிறான். கலெக்டர் ரெவினியூ டிபார்ட்மெண்டு அதிகாரியாய் இருந்தபோதிலும் ஜில்லாவின் க்ஷேமத்துக்கு உத்தரவாதி அவன் தான். அவசியம் ஏற்பட்டால் அவன் சம்பந்தமல்லாத இதர டிபார்ட்மெண்டு உத்தியோகஸ்தரும் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

Revenue Department :— திருச்சினாப்பள்ளி கலெக்டரின் அதிகாரம் 5 டிப்டி கலெக்டர்கள் 6 தாசில்தார்கள் 12 ஸப்மாஜிஸ்ட்ரேட்டுகள் மூலமாய் நடத்தப்படுகிறது. திருச்சி ஜில்லாவில் கஜானா அதிகாரி Treasury Deputy Collector. ஸர்க்காருக்காக கஜானா வேலை செய்ய திருச்சியில் ஒரு Imperial Bank of India-வின் கிளையுமிருக்-