பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரெவினியூ டிபார்ட்மெண்ட்

45


கிறது. திருச்சி தாலூகாவில் அதிகாரம் செலுத்துபவர் Head Quarter Division Deputy Collector-ம் தாசில்தாரும். குளித்தளை -கரூர், லால்குடி - முசிரி, பெரம்பலூர்-உடையார்பாளையம், இவைகளுக்கு மூன்று டிவிஷன் டிப்டி கலெக்டர்களும் 6 தாசில்தார்களும் உண்டு. தாசில்தார் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டது தாலூகா. ஒவ்வொரு தாலூகாவிலும் பல கிராமங்கள் உண்டு. கிராம அதிகாரிகளை மேல்பார்வை செய்ய தாசில்தாருக்குக்கீழ் பல ரெவினியூ இன்ஸ்பெக்டர்களும் இருக்கிறார்கள்.[1]

கிராமம் தான் unit of administration. கிராமத் தலைவன் முன்சீப். கிராம நிலங்களை அளவு செய்து பயிர்களைச் சோதித்து ஸர்க்கார் வாயிதாக் கணக்கு செய்பவன் கணக்குப்பிள்ளை. இவர்கள் இடும் வேலையைப் பார்க்க வெட்டியான், தலையாரி முதலிய வில்லேஜ் போலீஸும் ஏற்பட்டிருக்கின்றன. சர்க்கார் கிஸ்தியை வசூல் செய்வதுதான் முன்சீப்பின் முதல் வேலை. கிஸ்திபணம் தாலூகா கஜானாவுக்கு அனுப்பப்படும். அங்கிருந்து ஜில்லா கஜானாவுக்கும் பட்டணம் அக்கவுண்டண்டு ஜெனரலுக்கும் அனுப்பப்படும். முன்சீப்புக்கு சிறு குற்றங்களைப்பற்றி நியாய விசாரணை செய்யவும் அதிகாரம் உண்டு. அப்பொழுது அவனுக்கு வில்லேஜ் மாஜிஸ்ட்ரேட் என்று பெயர். இந்த வேலையில் இவனுக்கு மேலதிகாரிகள் ஸப்-மாஜிஸ்ட்ரேட், டிப்டி கலெக்டர்-மாஜிஸ்ட்ரேட், ஜில்லா கலெக்டர்-மாஜிஸ்ட்ரேட் முதலியவர்கள். கிராம முன்சீப்புக்கு ஸிவில் நியாய விசாரணை செய்ய அதிகாரமும் உண்டு. தவிர எந்த டிபார்ட்மெண்டு உத்தியோகஸ்தரும் கிராமத்துக்கு வந்தால் அவருக்கு வேண்டிய உதவி செய்ய கிராம முன்சீப்


  1. ரெவினியூ டிபார்ட்மெண்டின் மாகாண அதிகாரி சென்னையிலுள்ள ரெவினியூ போர்ட்.