பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


திருச்சினாப்பள்ளி
புராதன சரித்திரம்

1-ம் அதிகாரம்.
திரிசிரபுரம்.

ராவணன் லங்கையில் அரசு புரிந்த காலத்தில் அவன் சகோதான் திரிசிரஸ்[1] காவேரிக்கரையில் ஒரு காட்டில் வசித்தான். அவனுடைய வாஸஸ்தலம் பிற்காலத்தில் ஒரு நகரமாயமைந்தது. அந்நகருக்கு திரிசிரபுரமென்று பெயர். திரிசிரஸ் சிவபக்தனானதாலும், பரமசிவனைக் குறித்துத் தபஸ் செய்தமையாலும், மலையின் உச்சியில் சிவ பெருமானுக்கும் உமையன்னைக்கும் விநாயகக் கடவுளுக்கும் ஆலயம் கட்டி வைத்தபடியாலும், பகவான் அவனுக்குப் பிரத்தியக்ஷமாகி 'இந்நகருக்கு உன் பெயரே வைக்கப்படட்டும்' என வரமளித்தார். திரிசிராப்பள்ளி (திரிசிரஸ் + பள்ளி= நகரம்) என்றும் திருசிலாப்பள்ளி (திரு=பரிசுத்தமான அல்லது அழகிய + சிலா =மலையையுடைய + பள்ளி=நகரம்) என்றும் இவ்வூருக்கு வேறு நாமங்கள் உண்டு. திருச்சினாப்பள்ளி யென்பது ஜனங்கள் மருவி வழங்கும் பிசகான பெயர்.


2-ம் அதிகாரம்.
சோழர் நாடு.

திரிசிரபுரத்தில் வெகு காலமாய் இருந்த ஜனங்கள் சோழர். அவர் ஆரியரா அனாரியரா என்றாவது எங்கிருந்து எவ்விதம் இவ்வூருக்கு வந்தார் என்றாவது சொல்லமுடியாது. பாரதவருஷத்தில் புராதனமாய் இருந்த 56 தேசங்களுள் அவர் நாடு ஒன்று என்பதும் அவர் உன்னத நாகரிக


  1. மூன்று தலைகளையுடையவன்.