பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

திருச்சினாப்பள்ளி புராதன சரித்திரம்.


நிலையில் இருந்தார் என்பதும் நமக்குத் தெரிகிறது. ராமாயணாதி இதிஹாஸ காலங்களில் அவர் ஊர் தண்டகாரண்யத்தின் ஒரு பாகமாகயிருந்ததாகத் தோன்றுகிறது. திருச்சி ஜில்லாவின் வடக்கேயுள்ள கொல்லிமலைப் பிறதேசம் தான் கிஷ்கிந்தாபுரமென்றும் பெரம்பலூர் தாலூகாவிலுள்ள வாலிக்கொண்டாபுரந் தான் வாலி யிறந்து விழுந்த இடமென்றும் அநேகர் சொல்லுகிறார்கள். ஸாலிவாஹன சகாப்தத்துக்கு 338[1] வருஷங்களுக்கு முன் (B. C. 260) உண்டான அசோக சக்ரவர்த்தியினுடைய சிலாசாஸனங்களிலும் ஸா. 52-ல் (A. D. 130) இருந்த கிரீக் பூதத்வ சாஸ்திரிகளின் கிரந்தங்களிலும் சோழர்களைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. ஸாலிவாஹன சகாப்தத்துக்கு 325 வரு ஷங்களுக்கு முன் (B. C. 247) சோழமன்னர் லங்கைக்கு வெற்றியுடன் சென்றதாகவும் அந்நாட்டு ராஜ வம்ச சரித்திரங்களிலிருந்து தெரியவருகிறது.

சோழர் நாட்டின் எல்லைகள் :—

கடல் கிழக்குத் தெற்குக்கரை பொருவெள்ளாறு குடதிசையிற் கோட்டைக்கரையாம்-வடதிசை எணாட்டுப்பண்ணை யிருபத்து நாற்காதம் சோணாட்டுக்கெல்லையெனச் சொல்.

இது ஒரு பழமையான செய்யுள். இதில் சோழநாட்டின் எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன. வடக்கே பெண்ணுறும்+[2] கிழக்கே சமுத்திரமும் தெற்கே வெள்ளாறும்


  1. இப்புத்தக முழுவதும் வருஷங்கள் ஸாலிவாஹன சகாப்தத்தில் குறிக்கப்பட்டிருக்கின்றன. கிறீஸ்து சகாப்தம் (A.D.) தெரியவேண்டுமானால் ஸாலிவாஹன வருஷத்துடன் 78-ஐக் கூட்டவேண்டும்.*
  2. சோழ நாட்டின் வடக்கெல்லை வேங்கடாத்திரி அல்லது திருப்பதியென்றும் சிலர் சொல்லுவார்கள்.