பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் நாகரிகம்.

3


மேற்கே கோட்டைக் கரையும் கரைப்போட்டானாறும் சோழ மண்டலத்தின் விஸ்தீர்ணத்தைக் குறிக்கும். மேற்கெல்லைகளின் அடையாளங்கள் இப்பொழுதும் போத்தனூருக்கு சமீபத்திலும் குளித்தலை தாலூகாவிலும் காணப்படுகின்றன.

சோழர் நாகரிகம் :- சோழர்கள் அயல் நாட்டார்களுடன் நேசம் பாராட்டி வந்தார்கள். யுத்தப்பயிற்சியில் ஸ்பார்ட்டர்களுக்கும் மேலானவர்கள். க்ருஷியை வெகு கவனமாய் நடத்திவந்தார்கள். தஞ்சாவூர் பிறதேசத்தின் செழுமைக்குக் காரணமான கல்லணையைக் கட்டுவித்தவர் சோழ மன்னரே. அவர்களால் கட்டப்பட்ட பழய அணைதான் இப்பொழுது இருக்கும் கட்டடத்தின் அஸ்திவாரம். காவேரியிலிருந்து பிரியும் பல கால்வாய்கள் அவர்களால் தான் வெட்டப்பட்டன. உய்யக்கொண்டானின் தலைக் குமிழியைப்பற்றி மூன்றாவது குலோத்துங்கச் சோழனின் சிலா சாஸனம் அகப்பட்டிருக்கிறது. முசிரிக்கு சமீபத்திலுள்ள பெரிய வாய்க்காலின் தலைப்பு மூன்றாவது ராஜராஜனால் கட்டப்பட்டது. கஜாரண்யம் என்கிற திருவானைக் காவலில் ஜம்புநாதருக்கு கோச்செங்கட் சோழ மன்னன் ஆலயம் கட்டிவைத்ததாக சிலாசாஸனம் கோவில் மதில்களில் சமீப காலத்தில் காணப்பட்டது. தர்ம வர்மச்சோழ மன்னன் ஸ்ரீரங்கத்தில் ரெங்கனாதருக்கும் குணசேகரத்தில் ஸ்ரீநிவாஸனுக்கும் உறையூரில் பரமபக்தையான தன்குமாரி நாச்சியாருக்கும் ஆலயங்கள் கட்டி வைத்ததாகவும் சிலாசா ஸனங்கள் கிடைத்திருக்கின்றன.

நிலங்கள் வெகு கவனமாய் சர்வே செய்யப்பட்டன, 52,488,800,000-ல் ஒன்று வேலி நிலங்கூட அளவிடப்பட்டு சர்க்கார் தீர்வைக்கு கொண்டுவரப்பட்டது.