பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

திருச்சினாப்பள்ளி புராதன சரித்திரம்.


சோழமன்னர் கட்டிய பல அழகிய ஆலயங்களிலிருந்து சோழர்களின் சிற்ப சாஸ்திரத் திறமையை நாம் அறியக் கூடும்.

ராஜ்யபாரம் பூராவும் கிராம பஞ்சாயத்துக்களால் வகிக்கப்பட்டது. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும் கூடுவதற்கு ஸபாமண்டபங்களுமிருந்தன. வட ஆற்காடு ஜில்லாவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சாஸனத்திலிருந்து சோழர்களால் கட்டி வைக்கப்பட்ட ஒரு பஞ்சாயத்து மண்டபத்தில் ஓர் வித்தியாலயமும் மாணவர்களுக்கு போஜன சாலையும் வைத்தியசாலையும் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது. வித்தியார்த்திகளுக்கு சனிக்கிழமைகளில் ஸ்நானம் செய்ய எண்ணெய்யும் இராக்காலங்களுக்கு விளக்குகளும் கொடுக்கப்பட்டன. வைத்தியசாலையில் 15 வியாதிக்காரர்களுக்கு இடமும் (beds) அவைகளுக்கு வேண்டிய ஸவுகரியங்களும் இருந்தன. அநேக வேலைக்காரர்களும் இருந்தார்கள். பஞ்சாயத்துகள் அதிகாரம் செலுத்தாத ராஜாங்க விஷயம் ஒன்றுமில்லை. ஒவ்வொரு பஞ்சாயத்துக்குக் கீழும் கிளை சபைகள் பிரத்தியேக வேலைகளை மேல்பார்த்தன. அநேக கிராமங்கள் சேர்ந்து ஒரு அதிகாரியின் கீழுள்ள ஜில்லாவாகவும் அநேக ஜில்லாக்கள் சேர்ந்து ஒரு மாகாணமாகவும் கணக்கிடப்பட்டிருந்தன.

சோழர்கள் வியாபாரம் விஸ்தாரமாய்ச் செய்தார்கள். ஐரோப்பாவிலுள்ள ரோமன் ராஜ்யத்தோடும் ஸமுத்திரத்துக்கப்பாலுள்ள இன்னும் மற்ற ஊர்களோடும் கப்பல் மூலம் போக்கு வாத்து ஏற்பட்டிருந்தது. வடபர்வதங்களிலிருந்து ஸ்வர்ணமும் ரத்னங்களும் மேல்மலைகளிவிருந்து சந்தனம் அகில் முதலிய மரங்களும் தெற்கு சமுத்திரத்திலிருந்து முத்துக்களும் கீழ் கடலிலிருந்து பவழமும் கங்கை ப்ராந்தியத்தில் விளையும் பொருள்களும் காவேரிக்