பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X. அறங்காவலராக அரும் பெரும் பணிகள் செய்துள்ளார். அதிக வருவாயில்லாத அவ்வாலயத்தில் நித்திய பூசைகள் முட்டின்றி நடைபெறும் வகையில் ஒரு நிரந்திரத்திட்டம் வகுத்து அதற்கான பொருளில் பெரும் பாகத்தைத் தானும் தன் சம்பந்திகளாகிய அ. மு. மு. குடும்பத்தினருமாக ஏற்று நடத்தி வருகின்றனர். நூலின் 378ம் பக்கத்தில் திருவேங்கடமுடையார் ஒன்றும் குறைந்தவரல்லர் என உள்ளது. அவர் பெயருடைய இவரும் அப்படியே. அன்னாருடைய மணிவிழா நினைவு மலராகப் பொது நலம் கருதி எல்லா மக்களுக்கும் எக்காலத்திலும் நன்கு பயன்படும் வகையில் திருத்தலப் பயணம்' என்னும் அரிய நூல் ஒன்றை வெளியிட்டு வழங்குவது சாலப் பொருத்தமே. இந்நூலில் தேவாரப் பாடல்கள் பெற்ற 275 தலங்களும் ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப் பெற்ற 108 திருப்பதிகளும் இடம் பெற்றுள்ளன. 'திருவையாறு', 'திருப்பழனம்' என்னும் தலங்களுக்கு நடுவேயுள்ள திங்களூர் என்னும் அப்பூதியடிகள் அவதாரத்தலமும் பாடல் பெற்ற தலமேயாகும். அவர் மைந்தன் அரவம் திண்டியதால் மாண்டபோது அவனை அப்பர் அங்குள்ள திருக்கோயி லுக்குக் கொணர்வித்துப் பதிகம்பாடி உயிர்ப்பித்தாரன்றோ! "அன்றவர்கள் மறைத்ததனுக்கு அளவிறந்த கருணையராய்க் கொன்றைநறுஞ் சடையார்தங் கோயிலின்முன் கொணர்வித்தே 'ஒன்று கொலாம்' எனப்பதிகம் எடுத்துடையான் சிர்பாட பின்றைவிடம் போய்நீங்கிப் பிள்ளையுணர்ந் தெழுந்திருந்தான்" என்பது பெரிய புராணம். 'மைப்படிந்த கண்ணாளும்தானும் கச்சிமயானத்தான்'என்று தொடங்கும் திருத்தாண்டகப் பாடலும் கச்சி மயானத்துக் குரியதாகும். திருவாரூர் அரநெறி, திருப்புகலூர் வர்த்த மாணிச்சுரம்.மீயச்சூர் இளங்கோயில்போன்றதே இக்கோயிலும் காஞ்சி புரத்திலுள்ள திருக்கோயில்களில் சிவலிங்கம் மாத்திரம் இருப்பதற்குப்பண்டைக்காலத்தில் அம்பிகைக்குத்தனிக்கோயில் இருக்கவில்லை என்பது ஒரு காரணம். பிற்காலத்திலும் அம்பிகைக்குத் தனிச் சந்நிதி அமைக்காததற்குக் காரணம் காமாட்சியம்பிகையே அங்குள்ள எல்லாக் கோயில்களுக்கும் மூலமூர்த்தியாகப் கொள்ளப்பட்டதே என்பர். உற்சவ உருவம் 'ஏலவார்குழலி' என்ற திருப் பெயருடன் ஏகாம்பரேசுரர் கோயிலில் இருக்கிறது. திருக்கல்யான உற்சவம் பங்குனி