பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi உத்திரத்தில் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. அன்று நூற்றுக் கணக்கான மக்கள் யாதொரு செலவுமின்றி மனம் செய்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது. செட்டியாரவர்களும் அவருக்கு உறுதுணையாக, சிறந்த பக்த சிலரும் புலவர் பெருமானுமாகிய தமிழ்க்கடல் ராய சொ' அவர்களும் வேறு சில அன்பர்களும் மிக நல்ல முறையில் திருத்தலப் பயணத்தை மேற்கொண்டு நடத்தியுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு தலத்துக்கும் பொருத்தமான பாடல்களைத் திரட்டி அமைத்துள்ளனர். அவர்கள் சென்று வழிபட்ட சிவத்தலங்களை அடியேனும் வழிபடும் பேறு பெற்றுள்ளேன். அவர்கள் இன்னும் ஈழ நாட்டுக்குச் செல்லவில்லை. 1919ல் இலங்கை சென்று இரு தலங்களையும் வழிபடும்வாய்ப்புப்பெற்றேன். திருக்கேதிச்சரத்தில் நகரத்தார் திருப்பணி செய்துள்ளனர். கடைமுடி என்ற தலம்கிழையூரல்ல. கல்வெட்டுப்படி சென்னம் பூண்டி என்பர். அதே போல் சிற்றேமம் என்பது சிற்றாய்மூரல்ல, திருச் சிற்றம்பலம் என்பர். அதுவுமல்லநேமம், எழிலூர் என்ற ஊர்களே என்பாரும் உளர். அடியேன் இவ்வூர்களுக்கும் சென்று வழிபட்டேன். வைணவத் திருப்பதிகளில் வட நாட்டிலுள்ள அயோத்திக்கும் வட மதுரைக்கும் சென்றிருக்கிறேன். அயோத்தியிலும் வட மதுரையிலும் ப்ரபாவத்தில் கண்டபடி சந்நிதிகள் இல்லை. அயோத்தியில் குன்றின் மேல் அனுமன் கோயிலும் அண்மையில் கட்டப்பட்ட விஷ்ணு கோயிலும் (அம்மாஜிகா மந்திர்) உள்ளன. இராமர் ஜன்மஸ்தானம் ஒரு மதுதியை ஒட்டியிருக்கிறது. அதில் இப்போது அகண்ட பஜனை செய்து வருகிறார்கள். வட மதுரையில் கிருஷ்ணன் பிறந்த இடம் ஒரு குகையில் உள்ளது. சலவைக் கல்லில் கிருஷ்ணனுக்கும் புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது. 8 மைல் வடக்கேயுள்ள பிருந்தாவனத்தில் ரங்க மந்திர் என்று வழங்கும் புதிய கோயில் தமிழ் நாட்டு வைணவர்கள் ஆட்சியில் உள்ளது. வடமதுரையில் யமுனைத் துறையில் நாள்தோறும் மாலை தீபாராதனை நடைபெறுகிறது. மற்றும் செட்டியாரவர்கள் குழு சென்ற திருப்பதிகளுக்கும் சென்றுள்ளேன். கள்வனூர் என்னும் திருப்பதியிலுள்ள ப்ராபவப்படி காமாட்சியம்மன் கோயிலில் இல்லை. தாயார் சந்நிதியில்லை. பெருமான் உருவமும் மேற்கு நோக்கியில்லை. நிலாத்திங்கள் துண்டத்தி லும் தாயார் சந்நிதி இல்லை. வேளுக்கை என்ற தலம் காணப்பட வில்லை. வயல் வெளியிலுள்ள ஒரு குளத்தில் காணும் உருவத்தையே அத்தல மூர்த்தி என்பர். பரமபதமும் திருப்பாற்கடலும் எப்படி ஊனக் கண்ணால் காண முடியாதனவோ, அதே போல் கயிலாயம் இந்திர நீலப்பருப் பதம் இரண்டிலும் மூர்த்தியும் தலமும் காண முடியாதனவே. அனேகதங்காவதம் என விளங்கும் கெளரி குண்டத்திலும் கோயிலும் மூர்த்திகளும் இருப்பதாகத் தெரியவில்லை.