பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 திருத்தலப்பயணம் திருமங்கையார்வார் முளைக்கதிரை. குறுங்குடியுள் முகிலை, மூவா. மூவுலகும் கடந்துஅப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய அந்தணனை. அந்தணர்தம் சிந்தை யானை, விளக்குஒளியை, மரகதத்தை திருத்தண் காவில், வெஃகாவில், திருமாலைப் பாடக் கேட்டு, 'வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக!' என்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கி னாளே. 77. வேளுக்கை முகுந்தநாயகன்-வேளுக்கைவல்லி வழிபட்டநாள் : 11-9-57, 23-1-66. 1. திருமங்கையாழ்வார் 1 2. பேயாழ்வார் 3 (ஆக 4.) சின்னக் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பதி. நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். திருமங்கையாழ்வார் "மன்னும் மதிள்கச்சி, வேளுக்கை ஆளரியை" பேயாழ்வார் அன்று.இவ் உலகம் அளந்த அசைவேகொல் நின்றிருந்து வேளுக்கை நீள்நகர்வாய்-அன்று கிடந்தானைக் கேடில்சி ரானை முன் கஞ்சைக் கடந்தானை நெஞ்சமே காண்.