பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

சென்று அவன் குறித்த இடத்தில் அவனது வரவை எதிர் பார்த்து நின்ருர். திருநீறணிந்த நெற்றியினரை எவ் விடத்தும் கொல்லாத இயல்புடையார் ஏளுதி நாதர் என்பதன அறிந்த அதிசூரன் இதற்குமுன் என்றுமே திருநீறிடாதவன் அன்று வெண் ணிறு நெற்றியில் விளங்கப் பூசி நெஞ்சத்தே வஞ்சனையாகிய கறுப் பினையுட்கொண்டு தன் முகத்தைக் கேடகத்தால் மறைத் துக்கொண்டு ஏளுதி நாதரெதிர் விரைந்து சென்ருன். ஏளுதி நாதர் போர் செய்ய முற்பட்ட அளவில் கேடகத்தைச் சிறிது விலக்கிய நிலையில் நீறணிந்த அவன் முகத்தைக் கண்ட ஏளுதி நாதர் , 'இவர் சிவபெருமானுக்கு அடியவ ராகிவிட்டார். இவர் குறிப்பின் வழியே நிற்பேன்’ என வாளேயும் பலகையையும் கையிற்பிடித்தபடி போர் செய்வார்போல் வறிதே நின்ருர். அந்நிலையில் அதி சூரனும் அவரைக் கொலைசெய்ய எண்ணியதன் கருத்தினே எளிதில் நிறைவேற்றிக்கொண்டான். சிவபெருமான் பகைவனது கைவாளால் பாசம் அறுத் தருளிய ஏளுதி நாதர்க்கு எதிர் தோன்றி என்றும் பிரியாப் பேறளித்து மறைந்தருளினர்.

(1) கண்ணப் காயஞர்.

பொத்தப்பி நாட்டு உடுப்பூரிலே நாகன் என்னும் வேடர் தலைவனுக்கும் அவன் மனைவி தத்தை என் பவளுக்கும் மகளுகத் தோன்றியவர் திண்ணனர். விற் பயிற்சி பெற்ற இவர், பதிருைண்டு நிரம்பிய பின் தந்தை யின் சொற்படி வேடர்குலக் காவல் பூண்டார். வேடர்கள் சூழ வேட்டைக்குச் சென்று காட்டிலுள்ள கொடிய விலங்கு களேக் கொன்ருர். காட்டில் விரித்த Guotor அறுத்துக்கொண்டு ஓடிய வலிய பன்றியினைத் துரத்திச் சென்று குற்றுடை வாளால் இருதுண்டம் படக் கொன்று வீழ்த்தினர். நீர் வேட்கையில்ை நாணனும் காடனும் தொடர்ந்துவரப் பொன்முகலியாற்றில் தண்ணீர் பருகி எதிரே தோன்றும் காளத்தி மலையினைக் கண்டார்