பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S I

(34) சோமாசிமாற காவளுர்

சோழ நாட்டில் அரிசிலாற்றங்கரையிலுள்ள அம்பர் (அம்பல்) என்ற ஊரில் நான்மறை வழியே வேள்வி செய்யும் வேதியர் மரபில் தோன்றியவர் சோமா சி மாறர். வேள்விகள் பல செய்த இவர் , சிவனடியார்களுக்கு அன் புடன் அமுதூட்டும் பணியினை ஆர்வமுடன் செய்பவர் : திருவைந்தெழுத்து ஒதும் நியமம் பூண்டவர்; திருவாரூரை அடைந்து சுந்தரமூர்த்தி நாயனரின் திருவடிகளை அன்பினல் இடையரு போற்றினர். இத்தகைய அன் பின் திறத்தால் சிவலோகத்தை யடைந்து பேரின்பும் உற்ருர்.

(35) சாக்கிய நாயஞர்

சங்கமங்கை என்னும் ஊரில் வேளாளர் மரபிற். பிறந்த இவர் , எவ்வுயிர்க்கும் அருளுடையராய்ப் பிறவா நிலை பெற விரும்பிக் காஞ்சி நகரத்தையடைந்து புத்த சமயத்தை மேற்கொண்டார். அதுபற்றிச் சாக்கியர் எனப் பெயர் பெற்ருர், புத்த சமயத்தை மேற்கொண்ட இவர் பல சமய நூல்களையும் பயின்று சிவநெறிய்ே. பொருளாவது எனத் தெளிந்தார். உலகிற் செய்யப்படும் வினை, அவ்வினையைச் செய்யும் ஆன்மா, வினைப் பயனை ஆன்மா நுகரும்படி ஊட்டுவிக்கும் இறைவன் என்னும் மெய்ப்பொருள் நான்கையும் வற்புறுத்துவது. சைவசமயம் ஒன்றேயாகும். எந்நிலையில் நின்ருலும் எக் கோலம் கொண்டாலும் சிவனடியினை மறவாது போற்று தலே உறுதிப்பொருளாகும் என்று ஆராய்ந்து துணிந்த, சாக்கியர் தாம் கொண்ட புத்த வேடத்துடனேயே சிவ: பெருமானே மறவாது போற்றுவாராயினர். சிவலிங்கப் பெருமானைக் கண்டு கும்பிட்ட பின்னரே உண்பது என உறுதி பூண்டார். சிவலிங்கத்தினைக் கண்டார். அம் மகிழ்ச்சியின் பயனக இன்னது செய்வதென்றறியாது அருகிற்கிடந்த செங்கற்சல்லியை எடுத்து அதன் மேல் எறிந்தார். அதுவே சிவபெருமானுக்கு உவப்பாயிற்று: