பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

பும் பாகரையும் கொன்று நின்ற எறிபத்த நாயனுரை யடைந்து தம்முடைய உடைவாளைத் தந்து இக் குற்றத் திற்காக என்னையும் கொல்லுதல் வேண்டும்’ என்ருராக எறிபத்தர் அவ்வாளில்ை தன்னைக் குத்திக்கொள்ளும் நிலையில் அவர் கையைப் பற்றிக்கொள்ள இறைவனருளால் யானேயும் பாகரும் உயிர் பெற்றெழும்படி அடியார் பத்தியிற்சிறந்து விளங்கினர். புகழ்ச்சோழர் அனுப்பிய சேனைத் தலைவர்கள். திறை கொடாத அதிகனது மலையரணைப் பொடியாக்கி அவன் ஒடி ஒளியும்படி, அவனுடைய படைவீரர்களைக் கொன்று அவர்கள் தலைகளையும் நிதிக்குவியல்களையும் சேனைகளையும் கருவூர்க்குக் கொண்டுவந்தனர். அவர்கள் வெட்டிக் கொணர்ந்த படை வீரர்களிலே சிவனடியார்க்குரிய சடைத்தலை ஒன்றனைக் கண்ட புகழ்ச்சோழர் சீர்தாங்கும் இவர்வேனிச் சிரந்தாங்கி வரக்கண்டும் பார்தாங்க இருந்தேனே பழிதாங்குவேன்’ என்று நெஞ்சம் நெகிழ்ந்து இரங்கினர். செந்தி வளர்க்கும்படி செய்து திருநீற்றினை அண்சித்து சடைத்தலையினைப் பொற் கலத்தில் ஏந்தித் தமது முடிமேல் தாங்கிக்கொண்டு தியினை வலம் வந்து திருவைந்தெழுத்தோதி அத்தீயினுள்ளே புகுந்து சிவபெருமான் திருவடி நீழற்கீழ் அமர்ந்து இன்புறும் புெருவாழ்வு பெற்ருர்.

{43) நரசிங்கமுனையரை காயஞர்

திருமுனைப்பாடி நா ட் டி.னே த் திருநாவலூரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்தவர் நரசிங்கமுனை யரையர். முனை ய ரை யர் குடியிற்பிறந்த இவர் பகைவரைப் புறங்கண்ட பெருவீரர்; சிவபெருமான் திருக்கோயில்தோறும் செல்வம் பெருகத் திருத்தொண்டு கள் பல புரிந்தவர். திருவா திரை நாள்தோறும் சிவனடி. யார்களைத் திருவமுது செய்வித்து. ஒவ்வொருவர்க்கும் நூறு பொன் வழங்கி வந்தார். ரு நாள் துார்த்த வேட முடைய ஒருவர் திருநீறு அணிந்து அடியார் கூட்டத்திற் சேர்த்து வந்தார். அவருடைய துார்த்த வேடத்தைக்