பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

கண்டு அருகே நின்றவர்கள் இகழ்ந்து ஒதுங்கினர். அது கண்ட நரசிங்கமுனையரையர் அவ்வடியவரை எதிர் சென்று வணங்கி உபசரித்தார். சீலமில்லாதவர்களே யானுலும் திருநீறணிந்தாரை உலகத்தார் இகழ்ந்து நரகத்தில் விழாதபடி அவ்வடியார்க்கு இருநூறு பொன் கொடுத்து இன்மொழி பகர்ந்து அனுப்பினர். இவ்வாறு திருந்திய சிந்தையராய்த் திருத்தொண்டு பல புரிந்த நரசிங்க முனையரையர் சிவபெருமான் தி ரு வ டி நீழலை யடைந்து இன்புற்ருர் .

(48) அதிபத்த காயர்ை

சோழநாட்டில் நாகப்பட்டினத்தில் பரதவர் குலத் தில் தோன்றியவர் அதிபத்தர். பரதவகுலத் தலைவ ராகிய இவர் கடலில் வலை வீசி மீன் பிடிக்கும்போது முதலில் கிடைக்கும் மீனே அன் பி ளு ற் சிவபெரு மானுக்கு என விட்டுவிடுவதனை வழக்கமாகக் கொண் டிருந்தார். இறைவன் ஆணே யா ல் வலைவனந்தப்பி வறுமை எய்தித் தம் சுற்றத்தார் உணவின்றி வருத்தவும் பலநாள்களிலும் ஒவ்வொரு மீனே இவருக்குக் கிடைத்தது. கிடைத்த அவ்வொரு மீனையும் சிவபெருமானுக் கென்றே கடலின்கண் விட்டுவந்தார். ஒரு ந ள் இவருடைய ஏவலர்கள் கடலில் வலை வீசியபோது, விலைமதிக்கவொண்ணுத நவம்ணிகளின் ஒளி வாய்ந்த பொன்மீன் ஒன்று வலையிற் சிக்கியது. அது கண்ட அதிபத்த நாயனர் இது என்னை ஆட்கொண்டருளிய சிவனுக்கேயுரியது' என்று சொல்லிக் கடலிலே விட்டுவிட் டார். அப்பொழுது சிவபெருமான் விடைமீது அதி பத்தர்க்குமுன் விசும்பில் தோன்றி அடியார்களுடன் சிவலோகத்தே அமர்ந்திருக்க அருள்புரிந்து மறைந்தருளினர்.

(45) கலிக்கம்ப நாயினர்

தில்லைப்பதியின் மேல்பாலுள்ள திருப்பெண்ணுகடம் என்ற ஊரிலே வணிகர் குலத்தில் தோன்றியவர்