பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&芝

மானே நாளும் வழிபட்டுத் திருவாசகப்பாடல்கள் பல பாடியருளினர். ஈழத்திலிருந்து வந்த புத்தகுருவை வர்தில் வென்று ஊமைப்பெண் 3ணப் பேச வைத்தார் புத்தர்கள் சைவராயினர்.

இறைவன் அந்தணராய் மணிவாசகரையணுகி அவர் பாடிய திருவாசகம் முழுவதும் ஒதக் கேட்டு எழுதிக் கொண்டார். கூத்தப்பெருமானைப் பாட்டுடைத் தலைவ. ராகக்கொண்டு அகத்திணைக்கோவை பாடித் தருக எனக் கேட்டுத் திருச்சிற்றம்பலக்கோவையினை மணிவாச கர் பாடிவர, அதனையும் எழுதிக்கொண்டு , "மாணிக்க வாசகன் சொல்ல அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது எனக் கையொப்பம் இட்டு அவ்வேட்டினைப் பொன்னம்பலத்தில் திருக்களிற்றுப்படியிலே வைத்து மறைந்தருளினர்.

மறுநாட்காலையில் தில்லைவாழந்தணர்கள் அப் புதிய சுவடியைக் கண்டு வியந்து மாணிக்கவாசகரை அடைந்து அப்பாடல்களுக்குப் பொருள் விரித்தருளும்படி வேண்டினர். தில்லைவாழந்தணர்களுடன் தில்லுைப் பெருங்கோயிலையடைந்த திருவாதவூரடிகள் த்திரு வாசகத்திற்குப் பொருளாவார் தில்லைச்சிற்றம்பலவர கிய இவரே எனச் சுட்டிக்காட்டி அங்குள்ளார் யாவருங்கான அம்பலவாணர் திருவடிச்சோதியில் இரண்டறக் கலந் 35 fT fT .