உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ராசி

தொகுப்புரை

திருப்பாற் கடலைக் கடைந்த மாதவனும் கேசவனும் ஆகிய திருமாலை அடைந்து அவனிடம் பறையைப் பரிசாகப் பெற்றுக் கொண்ட செய்தியை ஆண்டாள் சொன்ன செந்தமிழ்ப்பாட்டு முப்பதினையும் இங்கு அதன் வடிவு கெடாமல் உரைப்பவர் நாராயணன் திருவருளைப் பெற்று எங்கும் இன்புறுவர்.

விளக்கவுரை

வங்கக்கடல்-ஈண்டு திருப்பாற்கடலை உணர்த்தியது. வங்கம்-வளைவினை உடையது என்பது பொருள். பறை கொள்ளுதல் - கண்ணனைப் பாடிப் பறையைப் பரிசாகப் பெறுவர்; அப்பறையை அடித்துப் பேரொலி எழுப்பிப் பாவையை வழிபட்டு நோன்பினை முடிப்பர்

என்பதாம்.

ஆய்வுச் செய்திகள்

1. தனியன்கள்

தனியன் என்ற தலைப்பு நூலுக்கு முன் இடம் பெற்றுள்ளது. அதில் இரண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன; அவை பின் வருமாறு:

அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம்-இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை; பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு. ’’

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை பாடியருள வல்ல பல்வளையாய்-pாடி நீ