உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 97

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற் றின்புறுவ ரெம்பாவாய்

பதவுரை

வங்கக்கடல் கடைந்த மாதவனை-திருப்பாற் கடலைக் கடைந்து அமுதம் தந்த மாதவனை (மிக்க தவப்பேறு உடையவனை) ,

கேசவனை-அழகிய திருமுடி உடையவனை;

திங்கள் திருமுகத்துச் சேயிழையார்-மதி போன்ற முகத்தை உடைய செல்வ மகளிர்

சென்று இறைஞ்சி-சென்று வணங்கி; அங்கு அப்பறை கொண்ட ஆற்றை-அங்கு அந்தப்

பறையைக் கொண்ட நெறி முறையை,

அணிபுதுவைப் பட்டர்பிரான் கோதை சொன்ன-அழகிய புதுவை என்னும் ஊரில் வாழும் விட்டுசித்தர் என்னும் பெரியாழ்வாரின் மகள் ஆண்டாள் சொன்ன

சங்கத் தமிழ் மாலை முப்பதும்-தூய செந்தமிழ்ப் பாடல்கள் முப்பதினையும்

தப்பாமே இங்கு இப்பரிசு உரைப்பார்-தவறாமல் இங்கு இவ்வகையில் உரைப்பவர்

ஈரிரண்டுமால் வரைத் தோள்-மலை போன்ற நான்கு. பெரிய தோள்களை உடைய

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்-அழகிய கண்களை உடைய திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்-எல்லா இடத்தும் திருவருள் பெற்ற இன்பமடைவர்