உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருப்பாவை

பாடற் கருத்துகள்

1. மார்கழி மாதம் நிலா வீசும் நன்னாள்;
ஆயர்பாடிச் செல்வச் சிறுமியரே!
நாராயணன் நமக்கே பறை தருவான்;
நீராடத் துயில் எழுந்து வருக.


2.நாம் நம்பாவை நோன்புக்கு ஏற்கும்
செயல்களைக் கேட்பீராக, பரமன் அடிபாடுவோம்;
நெய் உண்ணோம்; பால் உண்ணோம்;
காலை விடியலில் நீராடுவோம்;
மையிட்டு எழுதோம்;
மலரிட்டு நாம் முடியோம்;
தீய கோள்சொல் சென்று ஓதோம்;
செய்யத்தகாதவை செய்யோம்;
தான தருமங்கள் செய்வோம்;
பிறவித்துயர் நீங்கும் செயல்களை
எண்ணிச் செயல்படுவோம்.


3. பாவையை வழிபட்டு நீராடினால்
நாடெல்லாம் திங்கள் மும்மாரி பொழியும்;
வளமை மிக்க பசுக்களும் செல்வமும் பெருகும்.


4. மழைக் கடவுளே! மழையை நிறுத்தாதே;
ஊழி முதல்வன் டோல் மெய் கறுத்து,
ஆழி போல் மின்னி,
வலம்புரிபோல் அதிர்ந்து,
அவன் கையில் ஏவும் அம்புகளைப் போல
மழையை நீ பொழிவிக்க!
நாங்கள் மார்கழியில் நீராடி மகிழ்வோம்,