உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7.

14 亦r奥

மாயன்; வடமதுரையில் பிறந்தவன், யமுனை நதித்துறையில் ஆயர்பாடியில் ஆடி

மகிழ்ந்தவன்; ஆயர் குலத்தில் வளர்ந்தவன்; தேவகிக்குப் பெருமை தேடித்தந்தவன். அவனைத் தூய்மையாக நீராடி வந்து வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து, வழிபடுவோம்; எம் பாவங்கள் தீரும்:

மன மாசுகள் போகும்; தீமைகள் சேரா.

பறவைகள் ஆரவாரிக்கின்றன; நாரணன் திருக்கோயிலில் சங்குகள் முழங்குகின்றன; மூலப்பொருளாகிய பரமனை யோகியரும் முனிவர்களும் அரி அரி என்று அழைக்கும் ஒலி கேட்கிறது. இவற்றைக் கேட்டும் உறங்குகிறாய்; துயில் எழுக.

"கீசு கீசு" என்ற கரிக்குருவிகள் ஒலி செய்கின்றன; ஆய்ச்சியர் தயிர் கடையும் ஓசை கேட்கவில்லையா? நாரணன் பெயரை அடியவர்கள் கூறி வழிபடும் ஓசை காதில் விழவில்லையா; நீ கதவைத் திற.

கிழக்கு வெளுத்து விட்டது; எருமைகள் காலார மேய வெளியே அவிழ்த்து விடப்பட்டுள்ளன; களம் நோக்கிச் செல்பவரைத் தடுத்து நிறுத்தியுள்

ளோம்; பாவாய்! எழுந்திரு; பாடிப் பறைகொண்டு தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் நன்மைகள் பலவும் வாய்க்கும்; இதை நீ சிந்தித்துப்பார்.