உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 15

9.

10.

11.

துயில் அணைமேல் கண்வளரும் மாமன்

மகளே! மணிக்கதவம் தாள் திறப்பாயாக! மாமி! அவளை எழுப்பமாட்டீரோ?

ஏன் உன் மகள்தான் ஊமையோ அல்லது செவிடோ அல்லது வெறும் சோம்பல்தான்

காரணமா அல்லது தூக்க மயக்கமா. அவன் நாமம் பலவும் நவில்வோம்; துயில் எழுக.

செல்வ வாழ்க்கையுடையீர்

யார் உள்ளே? பதில் கூடப் பேசமாட்டீர்களா! வாசலையும் திறக்க மாட்டீர்;

கும்பகருணன் போரில் தோற்றான்; அவனுக்கே உரிய தன் தூக்கத்தை உனக்குத்

தந்து விட்டானா எழுந்திரு! நாராயணனைப் போற்று, அப்புண்ணியன்

நமக்குப் பறை தருவான். செல்வமகளே எழுக! கதவைத் திறக்க!

கோவலர் தம் பொற்கொடியே!

புறப்பட்டு வருக! சுற்றத்துத் தோழியர் வந்து

உன் முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்

பாடுகின்றனர். நீ மட்டும் ஏன்

ஏழாமலும், பேசாமலும் உறங்குகிறாய்?

செல்வ மகளே; துயில் எழுக.

12. நற்செல்வன் தங்கையே பணி

எம் தலையில் வீழ நின் வாசற் கடை வந்து