உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ராசி

13.

14.

நின்று மனத்துக்கு இனியவனைப் பாடவும்

நீ வாய் திறவாமல் இருக்கின்றாய், பேருறக்கம் விட்டு இனியேனும் எழுக.

அனைத்து வீட்டாரும் விழித்து எழுந்து வந்து

விட்டனர்.

பெண் பிள்ளைகள் எல்லாரும் கண்ணனின் கீர்த்தியைப் பாடிவிட்டுப் பாவைக் களம் சென்று விட்டனர்; வெள்ளி எழுந்து விட்டது; பறவைகளும் ஆராவாரிக்கின்றன; பாவையே நீரில் முழுகி மகிழாமல்

நீ மட்டும் ஏன் படுக்கையில் கிடக்கிறாய்? தனித்து நீ ஒதுங்குவது ஏன்? எங்களோடு கலந்து வருக.

உங்கள் புழைக்கடைத் தோட்டத்துக்

குளத்தில் செங்கழுநீர் பூத்துவிட்டது; ஆம்பலும் கூம்பிவிட்டது; தவத்தவர்

சங்கு ஊதி அவரவர் பணி செய்து தத்தம் திருக்கோயில்களுக்குப் போய்க்கொண்டிருக்கின்றனர்:

எங்களை முதலில் எழுப்புவதாக வாய்ப்

பேச்சுப் பேசினாய்; நங்காய்!

எழுந்திரு; நாசிறக்கப் பேசுகிறாய்: செயலில் கூசுகிறாய்; தாமரைக்

கண்ணனைப் பாடுவோம் வருக.