உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 98’

ஏர் ஆர்ந்த கண்ணி-மணம் மிக்க பூமாலையைச்சூடிய யசோதை-யசோதை பிராட்டியின் இளஞ்சிங்கம்-இளஞ்சிறுவனும் ஆகிய கார்மேனி-கரிய மேனியையும் செங்கண்-சிவந்த அழகிய கண்களையும் கதிர்மதியம் போல் முகத்தான்-ஒளிவீசும் சந்திரன் போன்ற முகத்தினையும் உடையவன் நாராயணனே-நாரணனே (திருமாலே) நமக்கே பறை தருவான்-நமக்கு உறுதியாகப் பறை என்னும்

முழவு வாத்தியத்தைப் பரிசிலாகத் தருவன் பாரோர் புகழ-உலகம் புகழும்படி படிந்து-நாம் நீராடி உயர்வோம்; எம்பாவாய்-எம் பாவைத் தெய்வமே! உன்னை

வழிபடுகின்றோம். ஏல்ஓர்-அசைநிலைகள். ஒசை நிரப்பவந்த அசைச் சொற்கள்

தொகுப்புரை

மார்கழி மாதம் நிலாவீசும் விடியற்பொழுதில் நீராட வருபவர்கள் புறப்பட்டு வாருங்கள்!

உயர்ந்த ஆபரணங்கள் பூண்டுள்ள இளம் மகளிரே! வளம் மிக்குள்ள ஆயர் பாடியில் வாழும் செல்வக் குடியிற். பிறந்த சிறுமியரே! கூரிய வேலினையும், பகைவரைத் தாக்கும் கொடுந் தொழிலையும் உடைய நந்தகோபனின் மகனும் மணம்மிக்க மாலைகள் சூடிய யசோதை பிராட்டி யின் இளஞ் சிறுவனும் ஆகிய கரிய மேனியையும், சிவந்த அழகிய கண்களையும், ஒளிவிடும் சந்திரன் போன்ற முகத்தினையும் உடைய நாரணனே நமக்கு உறுதியாகப் பறையைப் பரிசிலாகத் தருவான்; உலகம் பாராட்டிப்