உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 亦r伞

புகழும்படி நாம் நீராடி நோன்பு நோற்போம், எம்பாவையே

உன்னை வழிபடுகின்றோம்.

விளக்க உரை யாவை என்பது யாது?

பாவை என்பது பெண்வடிவம் உடைய சிலையைக் குறிப்பதாகும்.

'பாவை விளக்கு என்பது பெண் வடிவம் தாங்கிய விளக்கு என்று வழங்குகிறது.

'பாவை மகளிர்க்கு உவமையாகச் சங்க இலக்கியத்தில் வருகிறது. சிறப்பாகச் சேர நாட்டில் உள்ள கொல்லி

மலையில் உள்ள பாவையை உவமிக்கின்றனர்.

மார்கழித் திங்கள்: மாதங்களில் சிறந்தது மார்கழி என்பர். இம் மாதத்தில் இப்பாவை நோன்பு மேற்கொள்ளப்படு கிறது என்பது தெரிகிறது.

திங்கள்: மாதம்; திங்கள் என்பது மங்கலச் சொல்; அதில்

நூல் தொடர்வது சிறப்பு என்பர் அணிநூலார்.

மதிகிறைந்த நன்னாள்: இது பவுர்ணமி நாள் என்று கொள்வதற்கும் இடம் தருகிறது; நிலவு ஒளி வீசும் நாள் என்று பொதுவாகக் கொள்வது பொருந்தும். நேர் இழையிர் விளி; செல்வ மகளிர் என்பதாம். சிறுமீர்காள்: இதுவும் விளித்தொடர், இளங்கன்னியர்

என்பதாம். செல்வச் சிறுமீர்காள்: அவ் ஆயர் செல்வச் சிறப்பு உடையவர்கள் என்பது பாடல்கள் முழுவதும் கூறப்படு கிறது.

கண்ணி: தலைமாலை என்ற பொருளில் புறநானூற்றில் வருகிறது. கண்ணி கார் நறுங் கொன்றை என்று சிவ