உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருப்பாவை-விளக்க உரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாவை 25

பெருமான் சூடிய மலர் குறிப்பிடப்படுகிறது; அழகிய கண்

களை உடையவள் என்றும் பொருள் கூறுவர்.

ஏர்: அழகு, மணம் என்ற பொருள்களைத் தரும் சொல்.

இளஞ்சிங்கம்: இது உருவகம்: சிங்கம் குகையினின்று வெளிப்படுவது போல நீ வருகைதந்து ஆசனத்தில் அமர வேண்டும்’ ’ என்று பின்னர்க் கூறுகின்றார். அவன் வீறு நடைக்குச் சிங்கம் உவமையாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு முன்னோடியாக இங்கே "இளஞ்சிங்கம்' எனக் கூறப்பட் டுள்ள நயம் காண்க.

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் போந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போல’ ’ என்று உவமை கூறப்படுதல்

காண்க.

-திருப்பாவை-23.

கார்மேனி, செங்கண்-முரண்தொடை. கருப்பு சிவப்பு என வருவது முரண் அழகு.

செங்கண்- அழகிய கண்களைச் செவ்வரி பரந்த கண்” என்று கூறுவது கவி மரபு: போதரிக் கண்ணினாய்’ என்று பின்னும் கூறுதல் காண்க.

தருவான்- எதிர் காலம் காட்டும் வினைமுற்று. படிந்து- படிவோம்’ என்று முற்றுப்பொருளில் பொருள் கொள்க; கால வழுவமைதியும் ஆகும்.

எல்ஓர்-அசைச் சொற்கள்; ஓசை நயம் பற்றி வந்தன.

எம்டாவாய்-எம் பாவையே என்பது விளியாகக் கொள்க. எம் பாவைத் தெய்வமே! உன்னை வழிபடு

தி-3